Sports
வெற்றிப் பாதைக்குத் திரும்புமா RCB..? முந்தைய தோல்விக்கு பழிவாங்குமா RR..? - என்னென்ன மாற்றங்கள்?
போட்டி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs ராஜஸ்தான் ராயல்ஸ்
இடம்: மஹாராஷ்டிரா கிரிக்கெட் அசோஷியேன் ஸ்டேடியம், புனே
நேருக்கு நேர்:
போட்டிகள்: 24
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி: 12
ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி: 10
முடிவு இல்லை: 2
சிறந்த பேட்டர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டுப்ளெஸ்ஸி - 8 போட்டிகளில் 255 ரன்கள்
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர் - 7 போட்டிகளில் 491 ரன்கள்
சிறந்த பௌலர்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வனிந்து ஹசரங்கா - 8 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்
ராஜஸ்தான் ராயல்ஸ்: யுஸ்வேந்திர சஹால் - 7 போட்டிகளில் 18 விக்கெட்டுகள்
2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: 8 போட்டிகளில் 5 வெற்றிகள், 3 தோல்விகள் என 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. புள்ளிப் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. புனேவில் விளையாடிய போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்தது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு. 7 போட்டிகளில் 5 வெற்றிகள், 2 தோல்விகள் என 10 புள்ளிகள் பெற்றிருக்கிறது ராஜஸ்தான் ராயல்ஸ். புள்ளிப் பட்டியலில் அந்த அணி மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
இந்த இரு அணிகளும் இதற்கு முன்பு வான்கடே மைதானத்தில் மோதியிருந்தன. அந்தப் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி பெற்றது. 87 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை இழந்திருந்த ராயல் சேலஞ்சர்ஸ், ஷபாஸ் அஹமது - தினேஷ் கார்த்திக் ஆகியோரின் அட்டகாசமான பார்ட்னர்ஷிப்பால் வெற்றி பெற்றது.
கடைசிப் போட்டியில்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கடைசியாக விளையாடிய போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துக்கு எதிராக 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. முதலில் பேட்டிங் செய்த அந்த அணி வெறும் 68 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை வெறும் எட்டே ஓவரில் சேஸ் செய்து மிகப்பெரிய தோல்வியை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு பரிசளித்தது வில்லியம்சனின் அணி. அதே சமயம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியோ தங்கள் கடைசிப் போட்டியில் டெல்லி கேபிடல்ஸை வீழ்த்தி வெற்றியோடு களமிறங்கப்போகிறது. அந்தப் போட்டியில் இந்த சீசனில் தன்னுடைய மூன்றாவது சதத்தை நிறைவு செய்தார் ராஜஸ்தான் ராயல்ஸ் ஓப்பனர் ஜாஸ் பட்லர்.
மாற்றங்கள்: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி படுதோல்வி அடைந்திருந்தாலும் அந்த அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை அனுஜ் ராவத்துக்குப் பதில் மஹிபால் லோம்ரோர் களமிறக்கப்பட்டு, தொடர்ந்து தடுமாறும் கோலி ஓப்பனிங்கில் ஆடலாம். ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்றிருந்தாலும், அந்த அணியில் இரு மாற்றங்கள் இருக்கலாம். அவர்கள் பந்துவீச்சு கொஞ்சம் பிரச்னைக்குரியதாக இருக்கிறது. பந்துவீச்சில் தடுமாறும் ஓபெட் மெக்காய்க்குப் பதில் நவ்தீப் சைனி களாமிறக்கப்படலாம். அதேசமயம், பௌலிங் ஆப்ஷனைக் கூட்டுவதற்கு கருண் நாயருக்குப் பதில் ஜேம்ஸ் நீஷம் விளையாடலாம்.
பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம்:
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, விராட் கோலி, அனுஜ் ராவத்/மஹுபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், சூயஷ் பிரபுதேசாய், ஷபாஸ் அஹமது, தினேஷ் காத்திக், ஹர்ஷல் படேல், ஜாஷ் ஹேசில்வுட், வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ்
ராஜஸ்தான் ராயல்ஸ்: ஜாஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன், ஷிம்ரன் ஹிட்மெயர், ரியன் பராக், ஜேம்ஸ் நீஷம், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரென்ட் போல்ட், நவ்தீப் சைனி, பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சஹால்
Also Read
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !
-
அவதூறு பேச்சு... பதுங்கியிருந்த நடிகை கஸ்தூரி கைது... புழல் சிறையில் அடைப்பு !