Sports
பஞ்சாப் அணியை பழி தீர்க்குமா சென்னை அணி?.. இன்றைய போட்டியில் மீண்டும் மோதும் PBKS vs CSK #IPL2022
போட்டி: பஞ்சாப் கிங்ஸ் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
இடம்: வான்கடே, மும்பை
நேருக்கு நேர்: போட்டிகள் - 26
பஞ்சாப் கிங்ஸ் வெற்றி - 10
சென்னை சூப்பர் கிங்ஸ் - 16
சிறந்த பேட்டர்:
பஞ்சாப் கிங்ஸ் - லியாம் லிவிங்ஸ்டன்: 7 போட்டிகளில் 226 ரன்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - ஷிவம் தூபே: 7 போட்டிகளில் 239 ரன்கள்
சிறன்ய பௌலர்:
பஞ்சாப் கிங்ஸ் - ராகுல் சஹார்: 7 போட்டிகளில் 10 விகெட்டுகள்
சென்னை சூப்பர் கிங்ஸ் - டுவைன் பிராவோ: 7 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்
2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: 7 போட்டிகளில் 6 புள்ளிகள் மட்டுமே பெற்று எட்டாவது இடத்தில் இருக்கிறது பஞ்சாப் கிங்ஸ் அணி. முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று சீசனைத் தொடங்கிய அந்த அணி, கடைசி 4 போட்டிகளீல் மூன்றில் தோற்றிருக்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோ 7 போட்டிகளில் இரண்டில் மட்டுமே வென்றிருக்கிறது. ஐந்து போட்டிகளில் தோற்றிருப்பதால் புள்ளிப் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் தத்தளித்துக்கொண்டிருக்கிறது. முதல் 4 போட்டிகளில் தோற்றிருந்த சூப்பர் கிங்ஸ், கடைசி 3 போட்டிகளில் இரண்டில் வென்றிருக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் அணிகளை வீழ்த்தியிருக்கிறது சி.எஸ்.கே. வான்கடே ஸ்டேடியத்தில் இந்த இரு அணிகளும் தலா 1 போட்டியில் ஆடியிருக்கின்றன. அந்த இரண்டு போட்டிகளிலும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி இந்த இரு அணிகளையுமே வீழ்த்தியது. இந்த இரு அணிகளும் மோதிய முந்தைய போட்டியில் 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பஞ்சாப் கிங்ஸ். பஞ்சாப் 180 ரன்கள் அடிக்க, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 126 ரன்களே எடுக்க முடிந்தது.
கடைசிப் போட்டியில்: முந்தைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்கெதிராக படுதோல்வியடைந்தது பஞ்சாப் கிங்ஸ். அத்தனை பேட்ஸ்மேன்கள் இருந்தபோதும், அனைவரும் சொதப்ப, 115 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது பஞ்சாப் கிங்ஸ். அதை 57 பந்துகள் மீதம் வைத்து மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்தது டெல்லி. அதனால், பஞ்சாப் அணியின் ரன்ரேட் பெரிய அளவில் அடிவாங்கியது. தங்கள் மிகப்பெரிய ரைவல் மும்பை இந்தியன்ஸை கடைசிப் பந்தில் வீழ்த்தி பரபரப்பான வெற்றியைப் பதிவு செய்தது. முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 156 ரன்கள் மட்டும் எடுக்க, அதை தோனியின் ஃபினிஷோடு முடிவுக்குக் கொண்டுவந்தது சூப்பர் கிங்ஸ். முதல் ஓவரிலேயே மும்பையின் இரு ஓப்பனர்களையும் வெளியேற்றி ஆட்ட நாயகன் விருதும் பெற்றார் சென்னை அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி.
மாற்றங்கள்: தொடர்ந்து வாய்ப்புகளைப் பயன்படுத்துக்கொள்ளத் தவறும் ஜானி பேர்ஸ்டோவுக்குப் பதிலாக மீண்டும் மீண்டும் இலங்கையின் பனுகா ராஜபக்ஷாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். ஆறு பேட்ஸ்மேன்கள் மட்டும் இருந்தது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்ததால், நாதன் எல்லிஸ் இடத்தில் மீண்டும் ஒடியன் ஸ்மித் களமிறக்கப்படலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மாற்றங்கள் ஏதும் இருக்க வாய்ப்பில்லை. இந்தப் போட்டியிலும் மொயீன் அலி இல்லாமல்தான் சூப்பர் கிங்ஸ் களமிறங்கும்.
பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம்:
பஞ்சாப் கிங்ஸ்: மயாங்க் அகர்வால் (C), ஷிகர் தவான், பனுகா ராஜபக்ஷா, லியாம் லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் ஷர்மா (WK), ஹாரூக் கான், ஒடியன் ஸ்மித், ககிஸோ ரபாடா, ராகுல் சஹார், ஆர்ஷ்தீப் சிங், வைபவ் அரோரா
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட், ராபின் உத்தப்பா, மிட்செல் சான்ட்னர், அம்பதி ராயுடு, ஷிவம் தூபே, ரவீந்திர ஜடேஜா (C), மஹேந்திர சிங் தோனி (WK), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, முகேஷ் சௌத்ரி, மஹீஷ் தீக்ஷனா
Also Read
-
எரியும் மணிப்பூரை அணைக்க, ஒன்றிய பா.ஜ.க. அரசு துளியும் முயற்சிக்கவில்லை! : முரசொலி கண்டனம்!
-
மகனுக்காக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம்.. வேலைவாய்ப்பு என்று கூறி மாணவர்களை வரவழைத்த அர்ஜுன் சம்பத் -கண்டனம்
-
Carrom World Cup : “பெருமை கொள்கிறேன் மகளே...!” - தங்கம் வென்ற காசிமா குறித்து முதலமைச்சர் நெகிழ்ச்சி !
-
தொடரும் அங்கீகாரம்... 55-வது கோவா சர்வதேச திரைப்பட விழா : சிறந்த வெப் சீரீஸ் விருதுக்கு ‘அயலி’ பரிந்துரை!
-
“அதிமுகவை பாஜகவுடன் இணைத்து விடுவார்...” - பழனிசாமி பேச்சுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலடி !