Sports

#IPL2022 : 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருக்கும் குஜராத் - நேற்றைய போட்டியில் என்ன நடந்தது ?

போட்டி 35: கொல்கத்தா நைட்ரைடர்ஸ் vs குஜராத் டைட்டன்ஸ்

இடம்: டி.ஒய்.பாடில் ஸ்டேடியம், நவி மும்பை

நேருக்கு நேர்:

போட்டிகள் - 24

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் வெற்றி - 13

ராஜஸ்தான் ராயல்ஸ் - 11

சிறந்த பேட்டர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: ஷ்ரேயாஸ் ஐயர் - 7 போட்டிகளில் 236 ரன்கள்

குஜராத் டைட்டன்ஸ்: ஹர்திக் பாண்டியா - 5 போட்டிகளில் 228 ரன்கள்

சிறந்த பௌலர்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: உமேஷ் யாதவ் - 7 போட்டிகளில் 10 விக்கெட்டுகள்

குஜராத் டைட்டன்ஸ்: முகமது ஷமி - 6 போட்டிகளில் 8 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: விளையாடிய 6 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே தோற்றிருக்கும் குஜராத் டைட்டன்ஸ், 10 புள்ளிகளுடன் பாயின்ட்ஸ் டேபிளில் முதலிடம் பிடித்திருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான போட்டியில் மட்டும் தோற்றிருக்கிறது. அந்தப் போட்டி, இதே டி.ஒய்.பாடில் மைதானத்தில் தான் நடந்தது. இந்த மைதானத்தில் நடந்த மற்றொரு போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தியிருக்கிறது குஜராத். கொல்கத்தா நைட்ரைடர் அணியோ 7 போட்டிகளில் 3 வெற்றியோடு ஏழாவது இடத்தில் இருக்கிறது. கடைசியாக விளையாடிய 3 போட்டிகளிலுமே தோற்றிருக்கிறது அந்த அணி.

மாற்றங்கள்: கடந்த போட்டியில் குஜராத் கேப்டன் ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஆடாமல் இருந்தார். அவர் திரும்பும்பட்சத்தில் யஷ் தயால் பிளேயிங் லெவனிலிருந்து நீக்கப்படலாம். தொடர்ந்து சொதப்பும் விஜய் சங்கருக்குப் பதில் சாய் சுதர்ஷன் ஆடலாம். கொல்கத்தா அணியில் மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. ஒருவேளை தொடர்ந்தி சுமாராக பேட்டிங் செய்யும் வீக்கெட் கீப்பர் ஷெல்டன் ஜாக்சனுக்குப் பதில் தமிழக வீரர் பாபா இந்திரஜித் களமிறக்கப்படலாம்.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம்:

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: ஆரோன் ஃபின்ச், வெங்கடேஷ் ஐயர், ஷ்ரேயாஸ் ஐயர், நித்திஷ் ராணா, ஆண்ட்ரே ரஸல், ஷெல்டன் ஜாக்சன், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், ஷிவம் மாவி, உமேஷ் யாதவ், வருண் சக்ரவர்த்தி

குஜராத் டைட்டன்ஸ்: ரித்திமான் சஹா, சுப்மன் கில், சாய் சுதர்ஷன், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், அபினவ் மனோஹர், ராகுல் தெவேதியா, ரஷீத் கான், அல்சரி ஜோசஃப், முகமது ஷமி, லாக்கி ஃபெர்குசன்

போட்டி 36: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு vs சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

இடம்: பிராபோர்ன் ஸ்டேடியம், மும்பை

நேருக்கு நேர்:

போட்டிகள்: 19

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வெற்றி: 8

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வெற்றி: 11

சிறந்த பேட்டர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ஃபாஃப் டுப்ளெஸ்ஸி - 7 போட்டிகளில் 250 ரன்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: ராகுல் திரிபாதி - 6 போட்டிகளில் 205 ரன்கள்

சிறந்த பௌலர்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: வனிந்து ஹசரங்கா - 7 போட்டிகளில் 11 விக்கெட்டுகள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: டி.நடராஜன் - 6 போட்டிகளில் 12 விக்கெட்டுகள்

2022 ஐபிஎல் தொடரில் இதுவரை: 7 போட்டிகளில் 5 வெற்றிகள் பெற்றிருக்கும் ஆர்.சி.பி 10 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. பிராபோர்ன் ஸ்டேடியத்தில் இதுதான் அந்த அணிக்கு முதல் போட்டி. முதல் இரண்டு போட்டிகளில் தோற்றிருந்தாலும், தொடர்ந்து 4 வெற்றிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் ஐந்தாம் இடம் (8 புள்ளிகள்) பெற்றிருக்கிறது சன்ரைசர்ஸ். இந்த மைதானத்தில் விளையாடிய ஒரு போட்டியில் வெற்றியைப் பதிவு செய்திருக்கிறது அந்த அணி.

மாற்றங்கள்: இரண்டு அணிகளிலும் மாற்றங்கள் இருக்க வாய்ப்பில்லை.

பிளேயிங் லெவன் எப்படி இருக்கலாம்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: அனுஜ் ராவத், ஃபாஃப் டுப்ளெஸ்ஸி, விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், சூயஸ் பிரபுதேசாய், ஷபாஸ் அஹமது, தினேஷ் கார்த்திக், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜாஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரண், சஷாங் சிங், ஜெகதீஷா சுசித், புவ்னேஷ்வர் குமார், மார்கோ யான்சன், உம்ரான் மாலிக், டி.நடராஜன்

Also Read: IPL 2022 : ஆட்டத்தை வென்று கொடுத்தது தோனி மட்டுமா? ப்ரெட்டோரியஸ் அடித்த அந்த சிக்ஸர்.. CSK vs MI