Sports
”என்னை மிரட்டினாங்க..” : சாஹலை அடுத்து உத்தப்பாவும் மும்பை இந்தியன்ஸ் அணி மீது பரபரப்பு குற்றச்சாட்டு!
நடப்பு ஐ.பி.எல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடி வருகிறார் ராபின் உத்தப்பா. இவர் இதுவரை ஐ.பி.எல் தொடர்களில் 6 அணிகளுக்காக விளையாடியுள்ளார். இந்நிலையில் அடுத்தடுத்து அணிகள் மாறுவதற்கான காரணம் குறித்து கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு அளித்த பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியுள்ளார் ராபின் உத்தப்பா.
அதில், "2008ல் மும்பை அணிக்காகத்தான் நான் முதலில் விளையாடினேன். பிறகு அடுத்த தொடரில் மும்பை அணியில் இருந்து வெளியேற்றப்பட்ட வீரர்களில் நானும் ஒருவன். அப்போது எனக்கு இது மிகவும் கடினமாக இருந்தது.
என்னை அணியில் இருந்து மாற்றுவதற்கான கடிதத்தில் மும்பை அணியின் நிர்வாகத்தினர் கையெழுத்தி வலியுறுத்தினர். ஆனால் நான் கையெழுத்து இட மறுத்தேன். அப்போது அவர்கள் உங்களுக்கு மும்பை அணியில் இனி விளையாட வாய்ப்பு கொடுக்க முடியாது. நீங்கள் வேறு அணிக்கு மாறலாம் என பகிரங்கமாகவே கூறினர்.
பிறகு அடுத்த தொடரில் RCB அணிக்காக விளையாடினேன். அந்த தொடரில் நான் மன அழுத்தத்தில் இருந்ததால் சிறப்பான விளையாட்டை என்னால் வெளிப்படுத்த முடியவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே யுஷ்வேந்திர சாஹல் மும்பை அணி வீரர் ஒருவர் மீது குற்றச்சாட்டு வைத்துள்ள நிலையில், சென்னை வீரர் ராபின் உத்தப்பாவும் மும்பை அணியின் நிர்வாகத்தின் மீது புகார் வைத்துள்ளது கிரிக்கெட் உலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!