Sports
கே.எல்.ராகுலின் சாதனையைத் தகர்த்தெறிந்த ஷமி.. கம்பீருக்கு நன்றி சொன்ன பதோனி! #SportsUpdates
1. “சரிக்கு சமமாக முடிந்தது”!
நடப்பு ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் இரு புதிய அணிகள் மோதிக்கொண்டன. இப்போட்டியில் ஹர்திக் பாண்டியா குஜராத் அணியிலும், க்ருணால் பாண்ட்யா லக்னோ அணியிலும் மோதினர். குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை அவரது சகோதரர் குர்ணல் பாண்டியா தான் கைப்பற்றினார். அப்போது அவர் எந்தவொரு கொண்டாட்டத்திலும் ஈடுபடவில்லை.
போட்டி முடிந்த பின் ஹர்திக் பாண்டியாவிடம் இது குறித்து கேட்டதற்க்கு “கொஞ்சம் வலிக்கிறது. நாங்கள் போட்டியில் தோற்றிருந்தால் கூட இந்த இந்த அளவிற்கு என்னை பாதித்திருக்காது. எனினும் அவர் என் விக்கெட்டை எடுத்தார், நாங்கள் வெற்றி பெற்றோம். எல்லாம் சரிக்கு சமமாக முடிந்தது” என நகைச்சுவையாக கூறினார்.
2. வீரருக்கு கொரோனா பாதிப்பு!
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பிரெண்டன் வில்சன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான் சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஷ்டன் அகர் மற்றும் பிசியோதெரபிஸ்ட் பிரெண்டன் வில்சன் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா பாதிப்பு காரணமாக விக்கெட் கீப்பர் ஜோஷ் விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
3. சாதனையை தகர்த்த ஷமி!
ஐபிஎல் கிரிகெட்டில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக டக் அவுட் ஆனார் கே.எல்.ராகுல். இதற்கு முன்னதாக 2016ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் போது பெங்களூர் அணிக்காக விளையடியா கே.எல்.ராகுல் டக் அவுட் ஆகியிருந்தார். அதன் பின்னர் 6 ஆண்டுகளாக டக் அவுட் ஆகாத ராகுலை நேற்றை போட்டியின் முதல் பந்தில் முகமது ஷமி ஆட்டமிழக்க செய்து அவரது அந்த சாதனையை தகர்த்துள்ளார்.
4. கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்த பதோனி!
15வது ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் -லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. நேற்றைய ஆட்டத்தில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் எடுக்க தடுமாறியபோது சிறப்பாக விளையாடிய 41 பந்துகளில் 54 ரன்கள் எடுத்த இளம் வீரர் பதோனி, தனக்கு ஆதரவளித்த லக்னோ அணியின் ஆலோசகர் கவுதம் கம்பீருக்கு நன்றி தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறுகையில் “கவுதம் கம்பீர் எனக்கு நிறைய ஆதரவளித்தார். எனது இயல்பான விளையாட்டை விளையாடுமாறும் நீங்கள் நல்ல ஸ்கோர் எடுப்பீர்கள் எனவும் அவர் கூறினார். சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டியதில்லை. அதற்கு மூத்த வீரர்கள் இருக்கிறார்கள். அதனால் உங்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துமாறு கூறினார்” என தெரிவித்துள்ளார்.
5. மகளிர் உலகக்கோப்பை - அரை இறுதி ஆட்டம்!
மகளிர் உலகக்கோப்பை போட்டிக்கான அரை இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியும் வெஸ்ட் இண்டீஸ் அணி நாளை மோதுகிறது. 2 நாள் ஓய்வுக்குப் பிறகு முதல் அரை இறுதி ஆட்டம் நாளை (30-ஆம் தேதி) நடக்கிறது. இதில் 7 முறை சாம்பியனான ஆஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதுகின்றன. வெலிங்டனில் நடக்கும் இப்போடி இந்திய நேரப்படி நள்ளிரவு 3:30மணிக்கு தொடங்குகிறது. லீக் சுற்றில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆஸ்திரேலியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!