Sports
“பயோ-பபிள் விதிகளை மீறும் வீரர்கள் மீது கடும் நடவடிக்கை”: IPL கவுன்சில் தீவிர கண்காணிப்பு! #SportsUpdates
1. போபண்ணா - ஷபோவலோவ் ஜோடி கால்இறுதிக்கு முன்னேற்றம்!
மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா-டெனிஸ் ஷபோவலோவ் ஜோடி வெற்றி பெற்று கால்இறுதிக்கு முன்னேறியது. மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டம் ஒன்றில் ரோகன் போபண்ணா (இந்தியா)-டெனிஸ் ஷபோவலோவ் (கனடா) ஜோடி 6-3, 7-6 (7-3) என்ற நேர்செட்டில் முதல் நிலை இணையான குரோஷியாவின் மேட் பாவிக்-நிகோலா மெக்டிக்கை வீழ்த்தி கால்இறுதிக்கு முன்னேறியது.
2. பயோ-பபிள் விதிமுறைகளை மீறினால் கடும் நடவடிக்கை!
நடப்பு ஐ.பி.எல் தொடரில் கடைசி நேரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளியேறுவதை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐபிஎல் கவுன்சில் தீவிரமாக கவனித்துள்ளன. பயோ-பபிள் விதிமுறைகளை மீறும் இந்திய வீரர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளது. பயோ-பபிள் காரணமாக, குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளால் தேர்வு ஒப்பந்தம் செய்யப்பட்ட, இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களான ஜேசன் ராய் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஐபிஎல் 2022ல் இருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
3. பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது!
2021ஆம் ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில், வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானுவுக்கு பிபிசியின் இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய பளுதூக்கும் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றதன் மூலம் விளையாட்டு வரலாற்றில் தனது பெயரைப் பதிவு செய்தார் சாய்கோம் மீராபாய் சானு. டெல்லியில் நடந்த பிபிசி விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் இவ்விழாவில் விளையாட்டு, அரசியல் துறை பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
4. குஜராத் அணியிடம் லக்னோ அணி தோல்வி!
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை வான்கடே மைதனத்தில் நடந்த போட்டியில் குஜராத் அணியிடம் லக்னோ அணி தோல்வியடைந்தது. கடைசி வரை லக்னோ அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருந்தபோது, கேப்டன் கே.எல்.ராகுல் எடுத்த தவறான முடிவுகளால் அந்த அணியின் வெற்றி வாய்ப்பு பறிபோனது. ஆட்டத்தில் 2 விக்கெட்டுகளை எடுத்திருந்த சமீராவுக்கு ஒரே ஒரு ஓவரை தான் கொடுத்தார்.
அதாவது 18 மற்றும் 20வது ஓவரை இளம் பவுலர் ஆவேஷ் கானுக்கும், 19வது ஓவரை சமீராவுக்கும் கொடுத்து தவறான முடிவை எடுத்தார் கே.எல்.ராகுல். இதனால் குஜராத் அணி 19.4 ஓவர்களில் வெற்றி பெற்றது. கே.எல்.ராகுலின் இந்த மோசமான கேப்டன்சிக்கு ரசிகர்கள் மற்றும் கிரிகெட் விமர்சகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
5. நியூசிலாந்து அணி வெற்றி!
நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நெதர்லாந்து கிரிக்கெட் அணி செய்து ஒரு 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
49.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்கள் மட்டுமே. 203 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய நியூசிலாந்தில் அணி 38.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடி வில் யங் சதம் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!