Sports

BCCI-ஐ ஏமாற்றி தில்லுமுல்லு செய்தாரா CSK அணி வீரர்..? - IPL தொடரில் விளையாடுவதில் சிக்கல்?

அண்மையில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி ஐந்தாவது முறையாக கோப்பை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்தியாவின் இந்தச் சாதனைக்கு பக்கபலமாக இருந்தவர் ராஜ்வர்தன் ஹங்கர்கேகர். இவர் தனது சுழற்பந்து வீச்சால் எதிரணியின் விக்கெட்டுகளை சரித்ததைப் பார்த்து நட்சத்திர வீரர் அஸ்வினே பாராட்டு சான்றிதழ் கொடுத்துள்ளார். தனது திறமையால் இந்திய அணியில் கவனிக்கப்படக்கூடியே இளம் வீரராக தற்போது உருவெடுத்துள்ளார் ராஜ்வர்தன்.

ஐ.பி.எல் ஏலத்தில் கூட அவரை எடுப்பதற்காக சென்னை அணி நிர்வாகமும், மும்பை அணி நிர்வாகமும் கடுமையாகப் போட்டி போட்டனர். பின்னர் சென்னை அணியே அவரை 1.5 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் எடுத்து. இப்படி அடுத்தடுத்த கட்டங்களை எட்டிப்பிடித்த ராஜ்வர்தன் தற்போது வயது முறைகேடு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

ராஜ்வர்தன் தனது உண்மையான வயதை மறைத்ததாக மகாராஷ்டிராவின் விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓஷம்பிகராஷ் பி.சி.சி.ஐக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் எட்டாம் வகுப்பு சேரும்போது ஜனவரி 10, 2021 என்பதற்குப் பதில் தனது பிறந்த தேதியை நவம்பர் 10, 2002 என மாற்றியுள்ளார்.

இதனால்தான் இவரால் 19 வயதுக்குப்பட்டோருக்கான உலகக் கோப்பையில் விளையாடி முடிந்தது என கூறியுள்ளார். தற்போது இந்த வயது முறைகேடு புகார் இந்திய கிரிக்கெட் அணியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதன் காரணமாக ஐ.பி.எல் போட்டியில் இவர் விளையாடுவரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Also Read: அறிமுக போட்டியிலேயே அசத்திய ரவி பிஷ்னோய்.. அதிரடியாக வென்ற இந்தியா!