Sports
”ஃபினிஷராக பயணத்தை நிறைவு செய்யவே விருப்பம்” - தோனி இடத்தை பிடிக்க பார்க்கிறாரா தினேஷ் கார்த்திக்?
இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாடுவதே தனது கனவு என்றும், குறிப்பாக டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்றும், ஃபினிஷராக தனது கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்ய விரும்புவதாகவும் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரில் ஒருவரான தினேஷ் கார்த்திக் தேசிய அணிக்காக கடந்த 2019ஆம் ஆண்டு ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் இறுதியாக விளையாடியிருந்தார். அணியில் இளம் வீரர்களின் வருகையினாலும், துடிப்பான ஆட்டம் சற்று குறைந்ததாலும் தினேஷ் கார்த்திக்குக்கு தேசிய அணியில் இடம் கிடைக்கவில்லை.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணிக்காக மீண்டும் விளையாடுவதே தனது கனவு என்றும் குறிப்பாக இலக்கு போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதற்காகதான் கடின முயற்சியுடன் பயிற்சி எடுத்து வருவதாகவும் கூறியுள்ளார்.
தனது கனவு பயணம் குறித்து, ANI செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள தினேஷ் கார்த்திக்,
இந்திய அணிக்காக மீண்டும் விளையாடுவதே எனது இலக்கு. என்னால் முடிந்தவரை மிகக் கடினமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். என்னுடைய கடின முயற்சியால் இலக்கை அடைய முடியும் என்று நம்புகிறேன். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு கிரிக்கெட் அரங்கில் தன்னால் திறம்பட விளையாட முடியும் என்றும், மிகவும் விரும்பி விளையாடுவதற்காக காத்திருப்பதாகவும் கூறினார்.
இந்திய அணியில் மீண்டும் இடம் பிடிப்பதற்காக விஜய் ஹசாரே கோப்பை, சையது முஷ்டாக் அலி கோப்பை போன்ற தொடர்களில் விளையாடி சிறப்பான முறையில் தயாராகி இருப்பதாக கூறியுள்ள தினேஷ் கார்த்திக், இந்திய கிரிக்கெட் அணியின் டி20 போட்டிகளில் மீண்டும் இடம்பெறுவதே தனது உச்சபட்ச கனவு என்றும், டி20 போட்டிகளில் ஃபினிஷர் நாயகனாக தான் ஜொலிக்க விரும்புவதாகவும் கூறினார்.
2019 ஆம் ஆண்டு நடைபெற்ற நிதாஹாஸ் கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான இறுதி போட்டியில் 8 பந்துகளில் 29 ரன்கள் அடித்து இந்திய அணி கோப்பையை வெல்ல தினேஷ் கார்த்திக் காரணமாக இருந்தது நினைவுக்கூறத்தக்கது.
36 வயதான தினேஷ் கார்த்திக் இதுவரை 32 டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். இந்திய அணிக்காக கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.
வளர்ந்து வரும் இளம் வீரர்கள் பற்றி பேசிய தினேஷ் கார்த்திக், இந்திய அணியின் இளம் வீரர் ஷாருக் கானுக்கு சிறந்த எதிர்காலம் இருப்பதாகவும், இந்திய அணிக்கு பல்வேறு சாதனைகளை அவர் அரங்கேற்றுவார் என்றும் குறிப்பிட்டார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!