Sports
உலக டூர் பேட்மிண்டன் இறுதிப்போட்டி: கொரியாவின் 2K கிட்டிடம் வீழ்ந்த பி.வி.சிந்து!
உலக டூர் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து மற்றும் ஆன் சீ யங் இருவரும் மோதியிருந்தன. இந்த போட்டியில் ஆன் சீ 21-16, 21-12 என நேர் செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.
ஆன் சீ யங் கொரியாவை சேர்ந்த 19 வயதே ஆகும் இளம் வீராங்கனை ஆவார். பேட்மிண்டனின் வருங்கால சூப்பர் ஸ்டாராக கருதப்படுபவர். கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் இந்தோனேஷியா மாஸ்டர், இந்தோனேஷியா ஓபன் என இரண்டு தொடர்களையும் வென்றிருந்தார். சிந்துவுக்கு எதிராக இறுதிப்போட்டியை வென்றதன் மூலம் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் மூன்று தொடர்களை வென்று ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
இந்த இறுதிப்போட்டியில் தொடக்கத்திலிருந்தே ஆன் சீ யங்கே ஆதிக்கம் செலுத்தினார். நெட் ப்ளே, இன் & அவுட், பேக்ஹேண்ட் ஷாட்ஸ் என பல விதத்திலும் ஆன் சீயிடம் சிந்து தடுமாறிப்போனார். ஆன் சீ க்ராஸ் கோர்டாக அடித்த சில ஷாட்களை ரிட்டர்ன் செய்வதற்கு கூட சிந்து பெரிதாக முயற்சிகளஒ செய்யவில்லை. அழுத்தத்தில் நிறைய unforced error களையும் செய்தார். இன்& அவுட்டை கச்சிதமாக பார்த்து பாயிண்ட் எடுப்பதில் கில்லாடியான சிந்து அதிலும் சொதப்பினார். முதல் செட்டில் ஆன் சீ 20 புள்ளி எடுத்து கேம் பாய்ண்ட் எடுப்பதற்காக காத்திருந்த போது மட்டுமே தொடர்ச்சியாக நான்கைந்து புள்ளிகளை எடுத்து சிந்து சவாலளித்தார். ஆனால், ஆன் சீயின் வெற்றியை கொஞ்சம் தாமதப்படுத்த முடிந்ததே தவிர சிந்துவால் அசாத்தியமாக வேறெதுவும் செய்ய முடியவில்லை.
இரண்டாவது செட் தொடங்கியது. இரண்டாவது செட்டின் முதல் புள்ளியை சிந்துதான் எடுத்தார். தொடக்கத்தில் இருவரும் மாறி மாறி புள்ளிகளை எடுத்து 3-3, 4-4 என ஒரே மாதிரியே முன்னேறிக் கொண்டிருந்தனர். ஆனால், போக போக ஆன் சீ யங் தனது துறுதுறுப்பான ஆட்டத்தால் முன்னேறி மீண்டும் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தார். லாங் ரேலிக்களை எனர்ஜியும் துல்லியமும் குறையாமல் ஆடி புள்ளிகளை எடுத்தார். ஸ்மாஸ்களை சாஃப்டாக ஆடி சிந்துவை டெசிவ்வும் செய்திருந்தார். ஒட்டுமொத்தமாக மிகச்சிறப்பாக ஆடிய ஆன் சீ யங் சிரமமேயின்றி இரண்டாவதி செட்டையும் 21-12 என எளிதில் வென்றார்.
இந்திய வீராங்கனை பி.வி.சிந்து நேர் செட் கணக்கில் வீழ்ந்து இரண்டாம் இடத்தை பிடித்தார். கடைசியாக 2019 ஆம் ஆண்டு ஜப்பான் வீராங்கனை நவோமி ஓகுகராவை வீழ்த்தி சிந்து உலக சாம்பியன் பட்டத்தை வென்றிருந்தார். அதன்பிறகு, இந்த இரண்டு ஆண்டுகளில் பல தொடர்களில் நாக் அவுட் வரை முன்னேறி தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார். சிந்து சீக்கிரமே தனது ஃபார்முக்கு திரும்ப வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!