Sports
இந்திய அணியின் புதிய கேப்டனாகும் ரோகித் சர்மா.. நியூசிலாந்து தொடரில் இடம் பெற்ற வீரர்கள் யார் யார்?
உலக கோப்பை டி20 தொடரில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறிவிட்டது. இது இந்திய ரசிகர்களுக்குப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
மேலும் பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகளிடம் இந்தியா தோல்வியடைந்தது பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடருடன் கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக ஏற்கனவே விராத் கோலி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நியூசிலாந்து தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்துடன் இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் எதிர்க்கொள்கிறது.
இந்த போட்டிகள் வரும் 17ம் தேதி தொடங்குகிறது. முதல் டி20 போட்டி ஜெய்பூரிலும், 2 போட்டி நவம்பர் 19ம் தேதி ராஞ்சியிலும், கடைசி போட்டி நவம்பர் 21ம் தேதி கொல்கத்தாவிலும் நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து இரண்டு டெஸ்ட் போட்டிகள் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான டி20 போட்டிக்கு இந்திய அணியின் கேப்டகாக ரோகித் சர்மா, துணை கேப்டனாக கே.எல். ராகுல் ஆகியோர் நியமிக்ப்பட்டுள்ளர். அதேபோல் ருதுராஜ் கெயிக்வாட், வெங்கடேச்ஷ் ஆகியோர் முதல் முறையாக இந்திய அணிக்காக சர்வதேச போட்டியில் களம் இறங்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
டி20 போட்டிக்கான இந்திய அணியின் அணி: ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட், ஷ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷண் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் அய்யர், யஜ்வேந்திர சாஹல், ஆர்.அஷ்வின், அக்சர் படேல், ஆவேஷ் கான், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்