Sports
“எனக்காக எதுவும் பெருசா செய்யாதீங்க” - CSKல் நீடிப்பது குறித்து தோனி சூசகம்!
13வது ஐபிஎல் சீசனின் போது படு மோசமாக விளையாடி பெரும் விமர்சனத்துக்கு ஆளானது சென்னை அணி. அப்போது நாங்கள் மீண்டும் வலிமையோடு திரும்புவோம் என அணியின் கேப்டன் தோனி கூறியிருந்தார்.
அதன்படியே 14வது சீசனில் தொடக்கம் முதலே நல்லபடியாக விளையாடி கோப்பையையும் சென்னை அணி கைப்பற்றியிருந்தது. பேட்டிங் பெரிதும் சோபிக்கவில்லை என்றாலும் கேப்டனாக அணியை நன்றாக வழி நடத்தி சக வீரர்களுக்கு உந்துதலாக இருந்து கோப்பையை வெல்ல வழி வகுத்திருந்தார்.
இப்படி இருக்கையில், 40 வயதை எட்டியுள்ள நிலையில் தோனி தொடர்ந்து சிஎஸ்கே அணியில் நீடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், 2022 ஐபிஎல் சீசனில் அணிகள் ஏற்கெனவே இருந்த வீரர்களை தக்க வைக்க புது விதிகள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், தலா 4 வீரர்களை தக்க வைத்துக் கொள்ளலாம். அதன்படி 4 வீரர்களை தக்க வைத்தால் முதன்மையான வீரருக்கு 16 கோடியும், 3 வீரர்கள் என்றால் 15 கோடியும், 1 அல்லது 2 பேர் எனில் 14 கோடியும் உரிமையாளர்கள் செலவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வகையில் சென்னை அணியில் தோனியை தக்க வைக்கவேண்டுமெனில் அவருக்கு 16 கொடி ரூபாய் சம்பளமாக தர வேண்டி வரும். இது தொடர்பாக பேசியுள்ள அணியின் உரிமையாளர் சீனிவாசன், “தன்னை பெரிய தொகை எடுத்து ஏலத்தில் எடுக்க வேண்டாம்” என தோனி வேண்டுகோள் விடுத்துள்ளார் எனவும், அது அணிக்குதான் நஷ்டம் எனவும் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தோனி நியாயமான மனிதர். அவரை நாங்கள் விட்டுவிட மாட்டோம். அவர் இல்லையெனில் சிஎஸ்கே இல்லை. இருப்பினும் தோனியை போல அணியில் நீடிக்கும் மற்ற வீரர்களுக்கு இந்த சலுகை இருக்காது. ஆலோசனை செய்து முடிவுகள் வெளியிடப்படும். ஆனால் அது கடினமானதாகதான் இருக்கும் என சீனிவாசன் கூறியுள்ளார்.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!