Sports

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் திடீர் கைது : காரணம் என்ன?

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக போற்றப்படுபவர் மைக்கேல் ஸ்லாட்டர். இவர் 1993ல் இருந்து 2000ஆம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் துவக்க ஆட்டக்காரராக இருந்துள்ளார். 74 டெஸ்ட், 42 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 5,312 ரன்கள் குவித்துள்ளார்.

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் பல்வேறு தொலைக்காட்சிகளில், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராகப் பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில், நியூ சவுத் வேல்ஸ் போலிஸார் கடந்த வாரம் நிகழ்ந்த ஒரு சம்பவம் தொடர்பாக மைக்கேல் ஸ்லாட்டரை அவரது வீட்டிற்கே சென்று கைது செய்துள்ளனர். அக்டோபர் 12ஆம் தேதி இவர் குடும்ப வன்முறையில் ஈடுபட்டதாக ஒருவர் புகார் கொடுத்ததின் அடிப்படையில் போலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்லாட்டர் மீது யார் புகார் அளித்தது, என்ன மாதிரியான புகார் என்பது குறித்து அவரின் வழக்கறிஞரும், ஊடக மேலாளரும் தெரிவிக்க மறுத்துள்ளனர். முன்னாள் கிரிக்கெட் வீரர் கைது செய்யப்பட்டிருப்பது ஆஸ்திரேலியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “சாதி ரீதியாக அவதூறு பேச்சு” நள்ளிரவில் கைதான யுவராஜ் சிங் - 3 மணி நேரம் விசாரணை : என்ன நடந்தது?