Sports
டூப்ளெஸ்சிஸுக்கு காயம்... அவருக்கு பதிலாக யார்? - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சிக்கல்?
ஐ.பி.எல் போட்டிகள் செப்டம்பர் 19 முதல் அரபு அமீரகத்தில் தொடங்கவிருக்கின்றன. முதல் போட்டியிலேயே சென்னை அணியும் மும்பை அணியும் மோதவிருக்கின்றன. இந்நிலையில்தான் சென்னை அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு செய்து வெளியாகியுள்ளது. சென்னை அணியின் மிக முக்கிய வீரரான டூ ப்ளெஸ்சிஸ் காயமடைந்திருக்கிறார். இதுதான் சென்னை அணிக்கு இப்போது பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அணியின் வெற்றிகளில் மிக முக்கிய பங்களிப்புகளை கொடுத்தவர் டூப்ளெஸ்சிஸ். மேலும், பல முறை அணி தடுமாறிய போதும் நிலைத்து நின்று ஆடி அணியை காப்பாற்றியிருக்கிறார். 2020 ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி கடுமையாக சொதப்பிய டூப்ளெஸ்சிஸ் மட்டும் நின்று அத்தனை போட்டிகளும் இதற்கு உதாரணம்.
மேலும், இந்த சீசனில் நடந்து முடிந்திருக்கும் முதல் பாதியிலும் சென்னை அணிக்காக அட்டகாசமாக பெர்ஃபார்ம் செய்திருக்கிறார். மொத்தம் 7 போட்டிகளில் சென்னை அணி ஆடியிருந்தது. இதில் கடைசி நான்கு போட்டிகளிலுமே அரைசதம் அடித்து மிகச்சிறப்பான தொடக்கத்தை கொடுத்திருந்தார். 7 போட்டிகளில் மொத்தமாக 320 ரன்களை 145.45 ஸ்ட்ரைக் ரேட்டோடு எடுத்திருந்தார். சென்னை அணி 5 போட்டிகளை வென்று புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பதற்கு டூப்ளெஸ்சிஸே மிக முக்கிய காரணமாக இருந்தார்.
தற்போது வெஸ்ட் இண்டீஸில் நடைபெற்று வரும் கரீபியன் ப்ரீமியர் லீகில் லூசியா அணிக்காக ஆடி வருகிறார். அங்கேயும் ஒரு சதத்தை அடித்து மிகச்சிறப்பான ஃபார்மிலேயே இருந்தார். ஆனால், திடீரென ஒரு போட்டியில் காயமடைந்து இப்போது ஓய்வில் இருக்கிறார். நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியிலும் லூசியா அணிக்கு டூப்ளெஸ்சிஸ் களமிறங்கவில்லை. இன்று இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. இதிலும் அவர் பங்கேற்பாரா என்பது சந்தேகமாகவே இருக்கிறது.
ஒருவேளை டூப்ளெஸ்சிஸ் காயத்திலிருந்து குணமடையாத பட்சத்தில் சென்னை அணி முதல் ஒன்றிரண்டு போட்டிகளுக்கு அவரை தவறவிட வேண்டியிருக்கும். அது சென்னை அணிக்கு பின்னடைவையே ஏற்படுத்தும். டூப்ளெஸ்சிஸுக்கு பதில் இந்திய வீரர்களான ராபின் உத்தப்பா அல்லது ஜெகதீஸ் நாராயணனை உள்ளே கொண்டு வருவதற்கான வாய்ப்பும் இருக்கிறது.
ஆனால், அப்படிச் செய்யும்பட்சத்தில் வேறு எதாவது ஒரு வீரரை பென்ச்சில் வைக்க வேண்டியிருக்கும். அதனால், டூப்ளெஸ்சிஸுக்கு பதில் மொயீன் அலியையோ அல்லது சாம் கரனையோ ஓப்பனிங் இறக்கிவிடலாம். இன்னொரு வாய்ப்பாக அம்பத்தி ராயுடுவை கூட ஓப்பனிங் இறக்கிவிட சாத்தியம் இருக்கிறது.
எந்த வீரர்களை மாற்றினாலும் டூப்ளெஸ்சிஸ் சீக்கிரம் மீண்டு வந்து ஓப்பனிங்கில் இறங்கவேண்டும் என்பதே சென்னை ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது.
Also Read
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்