Sports
தோல்வியை ஏற்றுக்கொள்ள தயக்கம்.. Testக்கு பதில் T20 அடம்பிடிக்கும் இங்கிலாந்து : உறுதியாக நிற்கும் ‘BCCI’!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் நான்கு போட்டிகள் முடிவடைந்திருந்தது. இந்தியா 2-1 என தொடரில் முன்னிலை வகித்தது. இந்நிலையில் ஐந்தாவது போட்டிக்கு முன்பாக இந்திய முகாமில் சிலருக்கு கொரோனா பாதிப்பு உண்டானதால் அந்த போட்டி தடைப்பட்டது.
இன்றைக்கு வரைக்குமே ஐந்தாவது போட்டி குறித்த தெளிவான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டை பொறுத்தவரை இந்த கடைசி போட்டியிலிருந்து இந்தியா பின்வாங்கியதாகவும், அந்த போட்டியை இங்கிலாந்து வென்றதாகவும் அறிவிக்க வேண்டும் என விரும்பியது. இதன் மூலம் தொடரை 2-2 என சமன் செய்து தோல்வியை தவிர்க்கலாம் என்பது இங்கிலாந்தின் எண்ணம். ஆனால், இதற்கு பிசிசிஐயும் இந்திய அணி வீரர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஒரு முடிவு எட்டப்படாமலேயே இந்த போட்டி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
2022 ஜுலையில் இந்திய அணி இங்கிலாந்துக்கு மீண்டும் செல்கிறது. ஆனால், அப்போது டெஸ்ட் போட்டியை தவிர்த்து ஓடிஐ மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே ஆடுகிறது. அதனால், இங்கே மீதமிருக்கும் ஒரு போட்டியை அப்போது நடத்தலாம் என பிசிசிஐ விரும்பியது. இங்கிலாந்து கிரிக்கெட் போர்டை பொறுத்தவரைக்கும் இந்த திட்டத்திற்கு ஒத்துக்கொண்டாலும் ஒரு முட்டுக்கட்டையை போட்டது.
அதாவது ஒரு போட்டியை தனியான ஒரு போட்டியாக மட்டுமே எடுத்துக்கொள்வோம். முடிந்திருக்கும் நான்கு டெஸ்ட் போட்டிகளோடு சேர்க்கமாட்டோம் என்று கூறியது. இதற்கு பிசிசிஐ தலைவர் கங்குலி மறுப்பு தெரிவித்துள்ளார்.
அந்த ஒரு போட்டி இந்த தொடரின் தொடர்ச்சியாகத்தான் இருக்க வேண்டும் என்பதை உறுதியாக கூறியுள்ளார். மேலும், 'இங்கிலாந்துக்கு ஏற்பட்டிருக்கும் நஷ்டத்தை ஈடுகட்ட கூடுதலாக சில டி20 போட்டிகளில் ஆடி கொடுக்க தயார். ஆனால், இந்த டெஸ்ட்டை விட்டுக்கொடுக்க மாட்டோம்' என கங்குலி கூறியுள்ளார்.
1971, 1986, 2007 என இதற்கு முன் மூன்று முறை மட்டுமே இந்தியா இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது. இப்போதுதான் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதை விட்டுக்கொடுக்க இந்தியாவிற்கு விருப்பமில்லை. தோல்வியை ஏற்றுக்கொள்ள இங்கிலாந்துக்கு விருப்பமில்லை. அதனால், பேச்சுவார்த்தை இழுபறியாக தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
Also Read
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!