Sports

டோக்கியோ பாராலிம்பிக்கில் இந்தியா வென்ற வெண்கல பதக்கம் பறிப்பு: என்ன காரணம் ?

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக்ஸ் போட்டிகள் கொரோனா கட்டுப்பாடுகள் மத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய வீரர்கள் தங்களின் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களைக் குவித்து வருகிறார்கள்.

தற்போது வரை இந்தியா ஒரு தங்கம், 4 வெள்ளி, இரண்டு வெண்கலப் பதக்கங்களைப் பெற்றிருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற வட்டு எறிதல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய வீரரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை குறைந்துள்ளது.

பாராலிம்பிக்ஸ் போட்டியில் வீரர்களின் உடல் பாதிப்புகளுக்கு ஏற்ப பிரிவுகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடத்தப்படும். இந்நிலையில், நேற்று நடைபெற்ற F52 வட்டு எறிதல் போட்டியில் இந்திய வீரர் வினோத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றனர்.

ஆனால், இந்த பிரிவில் வினோத்குமார் பங்கேற்கத் தகுதியற்றவர் என்றும் வகைப்படுத்துதலில் ஏதோ குழப்பம் நடந்துள்ளதாக பாராலிம்பிக்ஸ் தொழில்நுட்பக்குழு தெரிவித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவின் ஒட்டுமொத்த பதக்க எண்ணிக்கை 7லிருந்து 6 ஆக குறைந்துள்ளது. வினோத் குமாரின் பதக்கம் திரும்பப் பெறப்பட்டுள்ளது இந்திய மக்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

Also Read: ஒரு மணி நேரத்தில் நான்கு பதக்கங்கள்.. பாராலிம்பிக்ஸில் வரலாறு படைத்திருக்கும் இந்தியா!!