Sports
#Olympics ஹாட்ரிக் வெற்றி.. காலிறுதியில் கால்பதித்த பி.வி.சிந்து - இந்தியாவின் பதக்க ஏக்கத்தை தீர்ப்பாரா?
ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்று இந்தியாவின் பெருமையை உயர்த்தியிருந்தார் பி.வி.சிந்து. கரோலினா மரினுடன் கடைசி நொடி வரை அவர் செய்த போராட்டத்தை இன்னும் யாராலும் மறக்க முடியவில்லை. ஆனாலும், தங்கப்பதக்கத்தை அவர் வெல்லாமல் போனது கொஞ்சம் வருத்தத்தையே கொடுத்தது. இந்த முறை டோக்கியோவில் பி.வி.சிந்து இதுவரை ஆடியிருக்கும் ஆட்டத்தை பார்க்கும்போது தங்க பதக்கத்தை வென்றுவிடுவார் போன்றே தெரிகிறது.
டென்மார்க்கை சேர்ந்த பிலிச்ஃபெல்ட்டுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் ஆடிய சிந்து, அவரை 21-15, 21-13 என நேர் செட் கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம், காலிறுதி சுற்றுக்கும் தகுதிப்பெற்றிருக்கிறார். இன்னும் ஒரு போட்டியில் வென்றால், இந்தியாவிற்கு பதக்கத்தை வென்று கொடுக்கும் வாய்ப்பு அதிகம் இருக்கிறது.
டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு முன்பாக கொஞ்சம் சுமாரான ஃபார்மிலிருந்த சிந்து, டோக்கியோவில் தனது அனுபவம் மூலம் மீண்டும் பழைய ஃபார்முக்கு திரும்ப தொடங்கியுள்ளார். பிலிச்ஃபெல்ட்டுக்கு எதிரான இந்த போட்டியில் கூட பிலிச்ஃபெல்ட் செய்த தவறுகளை மிகச்சிறப்பாக தனக்கு சாதகமாக மாற்றியிருந்தார் சிந்து. முதல் செட்டில் முதல் புள்ளியை பிலிச்ஃபெல்ட்டே எடுத்து லீட் வைத்திருந்தார். ஆனால், இதன்பிறகு ஒரு மூன்று புள்ளிகளை பிலிச்ஃபெல்ட் பாக்ஸுக்கு வெளியே அடித்த ஷாட்கள் மூலமே எடுத்தார் சிந்து.
சிந்துவை போன்றே புள்ளிகளை எடுக்க முயற்சி செய்த பிலிச்ஃபெல்ட் பல முறை ரிட்டர்ன் செய்யவேண்டிய ஷாட்களை மிஸ் செய்து புள்ளிகளை இழந்திருந்தார். ஒரு கட்டத்தில் அழுத்தம் ஏறிய பிலிச்ஃபெல்ட் சர்வ்களை கூட ஒழுங்காக செய்ய முடியாமல் சில புள்ளிகளை விட்டுக் கொடுத்தார். என்னுடைய வலிமையை கூட காட்ட தேவையில்லை. உங்களுடைய தவறுகளிலிருந்தே என்னால் புள்ளிகளை பெற முடியும் என ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார்.
டோக்கியோ ஒலிம்பிக்கில் சிந்து இதுவரை ஆடியிருக்கும் மூன்று போட்டிகளையும் வென்றிருக்கிறார். மூன்று போட்டிகளிலும் எதிராளிக்கு ஒரு செட்டை கூட கொடுக்காமல் நேர் செட் கணக்கில் வென்று முழுமையாக ஆதிக்கம் செலுத்தியிருக்கிறார். இந்த ஃபார்மை அவர் தொடரும்பட்சத்தில் நாளை நடைபெற இருக்கும் காலிறுதி போட்டியிலும் நிச்சயமாக வெல்வார் என்றே நம்பப்படுகிறது.
சிந்துவை சில்வர் சிந்து என விமர்சிப்பார்கள். எல்லா தொடரிலும் கடைசி வரை சென்று தோற்றுவிட்டு வருவதால் அப்படி அழைப்பார்கள். ரியோ ஒலிம்பிக்கிற்கு பிறகு ஒன்றிரண்டு தங்கப்பதக்கங்களை வென்றிருந்தாலும் சில்வர் சிந்து என்ற பெயர் முழுமையாக மாறவில்லை. டோக்கியோவில் தங்கம் வென்று அந்த பெயரை மாற்றுவதோடு இந்தியாவின் பதக்க ஏக்கத்தையும் தீர்ப்பார் என நம்பப்படுகிறது.
-உ.ஸ்ரீ
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!