Sports
எடுத்ததும் டக் அவுட்; 12லட்சம் அபராதம் - முதல் போட்டியிலேயே சொதப்பி மோசமான சாதனை படைத்த கூல் கேப்டன் தோனி
டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தாமதமாக ஓவர்கள் வீசியதால் அணியின் கேப்டன் தோனிக்கு ஐ.பி.எல் நிர்வாகம் 12 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
14வது சீசன் ஐ.பிஎ.ல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற 2-வது லீக் ஆட்டத்தில் சென்னை மற்றும் டெல்லி அணிகள் விளையாடின. முதலில் விளையாடிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 188 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து அபாரமாக விளையாடிய டெல்லி அணி 190 ரன்கள் எடுத்து வெற்றியை அடைந்தது.
இந்த போட்டியில் சென்னை அணி தாமதமாக பந்து வீசியதன் காரணமாக அணியின் கேப்டன் தோனிக்கு ஐ.பி.எல் நிர்வாகம் 12 லட்ச ரூபாய் அபராதத்தை விதித்துள்ளது. இது குறித்து கூறியுள்ள ஐ.பி.எல் நிர்வாகம் சென்னை அணி தாமதமாக பந்து வீசியதால் 12 லட்ச ரூபாய் அபராதம் அணியின் கேப்டன் தோனிக்கு விடுக்கப்பட்டிருக்கிறது. முதல் முறை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இந்த தவறு மீண்டும் தொடர்ந்தால் இரண்டு போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது.
20 ஓவர் போட்டிகளில் விதிப்படி 90 நிமிடங்களில் 20 ஓவர்களை அணியானது பந்து வீசி முடிந்திருக்க வேண்டும். சென்னை அணி நேற்றைய போட்டியில் கடைசி ஓவரை 90 வது நிமிடத்தில் வீசியிருக்க வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக காலதாமதமாக எடுத்துக் கொண்டதால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், தாமதமாக பந்து வீசுவது தொடர்பாக நடப்பாண்டில் அபராதம் பெறும் முதல் கேப்டன் என்ற மோசமான சாதனையை படைத்தார் தோனி.
நீண்ட நாட்களுக்கு பிறகு களத்தில் தோனியை பார்த்த ரசிகர்கள் அவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்த்த நிலையில், களமிறங்கிய வேகத்திலேயே டக் அவுட் ஆகி தோனி ஏமாற்றத்துடன் வெளியேறினார். மேலும் சென்னை அணி தொடக்க ஆட்டத்தில் தோல்வி அடைந்ததும் ரசிகர்களிடம் மிகவும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.
தொடக்க போட்டியில் டக் அவுட், தோல்வி, 12 லட்சம் ரூபாய் அபராதம் என அடுத்தடுத்து தோனி சிக்கலில் சிக்கி இருப்பது பேசுபொருளாகியுள்ளது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !