Sports
சுரேஷ் ரெய்னாவுக்குப் பிறகு ஐ.பி.எல்-ஐ விட்டு வெளியேறுகிறார் ஹர்பஜன் சிங்...என்ன காரணம்!!
மூத்த ஆஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் தனிப்பட்ட காரணங்களால் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2020 இல் இருந்து விலகியுள்ளார். ஹர்பஜன் சிங் தனது முடிவைச் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) க்கு வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே சென்னையில் நடந்த சிஎஸ்கே அணியின் பயிற்சி முகாமிலும் ஹர்பஜன் பங்கேற்கவில்லை, சிஎஸ்கே அணியுடன் அரபு நாட்டிற்கும் செல்லவில்லை அந்த நேரம் அவர் இந்தியாவில் தான் தங்கியிருந்திருக்கிறார்,அதற்கு பின் அணியுடன் இனைவார் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஏற்கனவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ஐக்கிய அரபு எமிரேட்ஸிக்கு பயணம் செய்த சுரேஷ் ரெய்னா பின்னர் சில தனிப்பட்ட காரணங்களுக்காக வீடு திரும்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், இந்தியன் பிரீமியர் லீக் 2020 இன் முழு அட்டவணை வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 4) வெளியிடப்படும் என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்திருந்தார். ஐபிஎல் 2020 போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறத் திட்டமிடப்பட்டுள்ளது, ஆனால் அதன் முழு விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!