Sports
“மருத்துவ பணியாளர்களை கௌரவிக்க சச்சின் எடுத்த திடீர் முடிவு” - ரசிகர்கள் வரவேற்பு ! #CoronaWarriors
உலகின் 180க்கும் மேலான நாடுகளை கொரோனா எனும் கொடிய நோய் உருக்குலைத்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தும், லட்சோப லட்ச மக்கள் வைரஸ் தாக்குதலுக்கு ஆளாகியும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
ஊரடங்கை தளர்த்தும் எண்ணத்துக்கு சென்றுவிடாதீர்கள் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இதற்கிடையே, மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என ஏராளமான மருத்துவப் பணியாளர்கள் தங்கள் இன்னுயிரை துச்சமாக நினைத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பணியாற்றி வருகின்றனர். அதன் காரணமாக உலகளவில் சுமார் 7 லட்சத்துக்கும் மேலானோர் கொரோனாவில் இருந்து மீண்டு வருகின்றனர்.
இப்படி இருக்கையில், கொரோனா பரவலால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்கள் இதுவரை காண்டிராத இன்னலை சந்தித்து வருகின்றனர். அடுத்த வேளை சாப்பிடுவதற்கும் பணமும் இல்லை, வேலையும் இல்லாததால் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஆகையால் வசதிபடைத்த சினிமா, விளையாட்டு பிரபலங்கள் பலர் ஏழை எளிய மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றனர். இந்தியாவிலும் இந்த நிகழ்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பிரதமர் , முதலமைச்சர்கள் நிதிகளுக்கு நிதியுதவியும் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டராக விளங்கும் சச்சின் டெண்டுல்கர், மருத்துவப் பணியாளர்களை கௌரவிக்கும் விதமாகவும், அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.
என்னவெனில், நாளை (ஏப்ரல் 24) சச்சினுக்கு 47வது பிறந்த நாள். அவரது பிறந்த நாளை கிரிக்கெட் அரங்கும், ரசிகர்களும் ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் எனவும், தானும் கொண்டாடப்போவதில்லை எனவும் சச்சின் தெரிவித்துள்ளார்.
நாடு இக்கட்டான சூழலில் இருக்கும்போது என்னுடைய பிறந்த நாளை கொண்டாடப் போவதில்லை என அவர் முடிவெடுத்துள்ளார். அவரது இந்த முடிவுக்கு சமூக வலைதளங்களில் வரவேற்பும் கிடைத்ததோடு, பொதுவான புகைப்படத்தையும் ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வீட்டிலேயே இருக்கும்படி வலியுறுத்தி வருகின்றனர்.
முன்னதாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக சச்சின் டெண்டுல்கர் பிரதமர் மற்றும் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு தலா ரூ.25 லட்சம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!