Sports
காயம் காரணமாக நியூசிலாந்து கிரிக்கெட் தொடரில் இருந்து விலகிய முன்னணி வீரர்கள் - இந்திய அணிக்கு பின்னடைவு!
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி முதல் டி20 போட்டி ஆக்லாந்தில் வரும் 24ம் தேதி துவங்குகிறது.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் இருந்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் விலகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூரில் நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது ஷிகர் தவான் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக மைதானத்தில் இருந்து ஷிகர் தவான் அழைத்துச் செல்லப்பட்டார், அவருக்கு பதிலாக சாஹல் ஃபீல்டிங் செய்தார். இந்திய அணி பேட்டிங்கின் போதும் ஷிகர் தவான் களமிறங்கவில்லை.
இந்நிலையில், ஷிகர் தவானுக்கு மருத்துவமனையில் பரிசோதனை செய்ததில் அவரின் தோள்பட்டை எலும்பில் காயம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதனால் சில வாரங்கள் ஷிகர் தவான் ஓய்வில் இருக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இதனால் அவர் நியூசிலாந்துக்கு எதிரான இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுகுறித்து பி.சி.சி.ஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
தவானுக்கு மாற்றாக தற்போது நியூசிலாந்து சென்றிருக்கும் ‘இந்திய -ஏ’ அணியிலிருக்கும் மயங்க் அகர்வால், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகிய மூவரில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது.
அதேபோல இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடும்போது கணுக்காலில் காயம் ஏற்பட்டது. அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் ஆறு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். இதனால், இஷாந்த் சர்மா நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து பி.சி.சி.ஐ தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரிலிருந்து தவான் மற்றும் இஷாந்த் சர்மா விலகியுள்ளது இந்திய அணிக்கு சற்றே பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி முன்னிலை !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?