Sports
கிரிக்கெட்டுக்கு முழு ஓய்வு - தமிழ் சினிமா பக்கம் திரும்பிய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான்!
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளராக இருந்த இர்ஃபான் பதான் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
கடந்த 2003ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணியின் வீரராக அறிமுகமானவர் இர்ஃபான். வேகப்பந்து வீச்சாளரான இவர் இதுவரையில் 301 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக கடந்த 16 ஆண்டுகளில் 120 ஒருநாள் போட்டியில் 173 விக்கெட்டுகளையும், 29 டெஸ்ட் போட்டிகளில் 100 விக்கெட்டுகளையும், T20 போட்டிகளில் 28 விக்கெட்டுகளையும் தனது பந்துவீச்சால் சாய்த்துள்ளார்.
மேலும், 2006ல் நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் முதல் ஓவரிலேயே ஹாட்ரிக் விக்கெட் எடுத்த பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல, 2007ல் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை போட்டியில் 16 ரன்களில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் இர்ஃபான்.
இறுதியாக 2012ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் விளையாடிய இர்ஃபான் பதான் அதன் பிறகு உள்ளூர் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார்.
பின்னர் 8 ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெறாமல் இருந்த இர்ஃபான் பதான், தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக இந்திய அணியின் ஆல் ரவுண்டரான இர்ஃபான் பதான் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் விக்ரமின் கோப்ரா படத்தில் இர்ஃபான் பதான் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!
-
”தமிழ் குறித்து எங்களுக்கு எவரும் பாடம் எடுக்க வேண்டியதில்லை” : அமைச்சர் கீதா ஜீவன்
-
சென்னை மாணவர்களுக்கு Good News : இன்று திறக்கப்பட்ட ’முதல்வர் படைப்பகம்’ - 5 முக்கிய சிறப்புகள் என்ன?
-
”தமிழ்நாட்டின் குரலுக்கு ஒன்றிய அரசு பணிந்தே தீரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!