Sports
சென்னையில் நாளை ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்குமா நடக்காதா? - வானிலை மையம் சொல்வது என்ன?
சென்னையில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வரும் நிலையில் நாளை நடக்கவிருக்கும் இந்தியா-மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான ஒருநாள் போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - மேற்கிந்திய தீவுகளுக்கு இடையே அண்மையில் நடந்த T20 தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதற்கு அடுத்தபடியாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டி நாளை (டிச.,15) சென்னையில் நடைபெறவுள்ளது.
இதற்காக, சென்னை வந்தடைந்த இரு அணி வீரர்களும் சேப்பாக்கத்தில் நேற்று தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டனர். 2 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சென்னையில் நடைபெறும் ஒருநாள் போட்டி என்பதால் இதற்கான டிக்கெட்டுகள் முழுதும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
இந்நிலையில், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று முதல் மழை பெய்து வருவதால் நாளைய போட்டி நடைபெறுமா இல்லையா என்பதில் ஐயப்பாடு எழுந்துள்ளது.
இதற்கிடையில் அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவித்துள்ள சென்னை வானிலை மையம், இதனால் கிரிக்கெட் போட்டிக்கு தடை ஏற்படாது என தெளிவுபடுத்தியுள்ளது.
இருப்பினும், மழை பெய்தால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்த ஒருநாள் ஆட்டம் தடைபடுமே என்ற கவலை ரசிகர்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது. மழை வரவு மகிழ்ச்சியை அளித்தாலும் போட்டியின்போது வருவது கிரிக்கெட் ரசிகர்களை சற்று சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!
-
2 பிரிவுகளில் தொடங்கிய சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: வென்றால் லட்சக்கணக்கில் பரிசு
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!