Sports
மேற்கிந்திய தீவுகளுடன் மோதும் இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்கள் யார்? யார்?
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி.20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணியை தேர்வு குழு கடந்த 21ம் தேதி அறிவித்தது.
வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன், க்ருனால் பாண்டியா, கலீல் அகமது ஆகியோர் நீக்கப்பட்டு ஜடேஜா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி ஆகியோர் அணியில் இணைக்கப்பட்டுள்ளனர்.
வங்கதேசத்திற்கு எதிரான T20 தொடரில் இடம்பெற்ற சஞ்சு சாம்சன் ஒருபோட்டியில் கூட விளையாடாமல் நீக்கப்பட்டார். இதுப்பெரும் சர்ச்சையை கிளப்பியது. மக்களவை காங்கிரஸ் உறுப்பினர் சசிதரூர், சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி.20 தொடரில் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ஷிகர் தவனுக்கு பதில் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.
உள்ளூர்ப்போட்டி ஒன்றில் கலந்துகொண்ட ஷிகர் தவனுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அதனால், வரவிருக்கும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரில் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே சஞ்சு சாம்சன் இந்திய அணியில் சேர்க்க்கப்பட்டுள்ளார்.
தொடர்ந்து சொதப்பி வரும் பண்ட்டிற்கு பதில் இந்தத்தொடரிலாவது சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என கிரிக்கட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
T20 போட்டிகள் :
மும்பை - டிசம்பர் 6ம் தேதி
திருவனந்தபுரம் - டிசம்பர் 8ம் தேதி
ஹைதராபாத் - டிசம்பர் 11ம் தேதி
ஒருநாள் போட்டிகள் :
சென்னை - டிசம்பர் 15ம் தேதி
விசாகப்பட்டினம் - டிசம்பர் 18ம் தேதி
கட்டாக் - டிசம்பர் 22ம் தேதி
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?