Sports
’கங்குலிக்கு முன்னாடியே நாங்கதான் சாம்பியன்... தெரியாமல் பேசவேண்டாம்’ : கோலியை முறைக்கும் சுனில் கவாஸ்கர்
பகல் இரவு ஆட்டமாக கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற இந்தியா - வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று முடிவடைந்தது. இதில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி வங்கதேசத்திற்கு எதிரான தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த வெற்றியின் மூலம், இந்திய அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் 360 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.
ஆட்டத்திற்கு பின்னர் பேசிய இந்திய அணியின் கேப்டன் கோலி, ''இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் தற்போது பந்து வீசுவதை பார்த்தால் அவர்கள் எந்த நாட்டிலும் எந்த மைதானத்திலும் விக்கெட்டுகளை எடுக்கும் திறமை உள்ளவர்களாக தெரிகின்றனர்.
சுழற்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக பந்துவீசி வருகின்றனர். இந்த தொடரின் வெற்றிக்கு இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே காரணமாக திகழ்ந்தனர்'' எனத் தெரிவித்தார்.
மேலும், இந்திய அணியின் இந்த வெற்றிப்பயணம் முன்னாள் கேப்டனான கங்குலியின் அணியிடம் இருந்துதான் தொடங்கியது. அதைத் தான் நாங்களும் தொடர்கிறோம் எனத் தெரிவித்தார். கோலியின் கருத்துக்கு இந்தியாவின் முன்னாள் பேட்டிங் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் காட்டமாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், இது ஒரு அருமையான வெற்றி, ஆனால் நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். இந்த விஷயம் 2000ம் ஆண்டில் கங்குலியின் அணியுடன் தொடங்கியது என்று இந்திய கேப்டன் கூறினார். கங்குலி பி.சி.சி.ஐ தலைவராக உள்ளதால் கோலி அவரைப் பற்றி நல்ல விஷயங்களைச் சொல்ல விரும்பி இருக்கிறார் தவறில்லை.
ஆனால் இந்திய அணி 70 மற்றும் 80களில் வெற்றி பெற்றுள்ளது. அப்போது விராட் கோலி பிறக்கவில்லை. கிரிக்கெட் 2000களில் மட்டுமே தொடங்கியது என்று நிறைய பேர் நினைக்கிறார்கள், ஆனால் இந்திய அணி 70களில் வெளிநாடுகளில் வென்றுள்ளது'' என காட்டமாகப் பதிலளித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!