Sports
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் : ரோஹித் சர்மாவுக்கு கட்டாய ஓய்வு ?
மேற்கிந்திய தீவுகள் அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது.
எம்.எஸ்.கே பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்களை நாளை தேர்வு செய்யவுள்ளனர்.
இத்தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. ரோஹித் சர்மா இந்தாண்டு தொடக்கம் முதல் ஓய்வே இல்லாமல் அனைத்து போட்டிகளிலும் ரோஹித் ஷர்மா பங்கேற்று வருகிறார்.
இதனிடையே டெஸ்ட் போட்டிகளிலும் ரோஹித் சர்மா தொடக்க வீரராக விளையாடுவதால் அவருக்கு கட்டாயம் ஓய்வு தேவை. மேலும், இந்தாண்டில் மட்டும் ரோஹித் ஷர்மா ஐ.பி.எல் போட்டிகள் உட்பட மொத்தமாக 60 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
முன்னதாக வங்கதேசம் மற்றும் நியூஸிலாந்திற்கு எதிரான T-20 தொடரின் போது கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. நாளை நடைபெறும் தேர்வுக்குழு கூட்டத்தில் ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிப்பது குறித்து முடிவு செய்யப்படும் என தெரிகிறது.
ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டால், டெஸ்ட் மற்றும் உள்ளுர் போட்டிகளில் தொடர்ந்து கலக்கி வரும் மயங்க் அகர்வால் மாற்று வீரராக தேர்ந்தெடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை போட்டியில், மாற்று தொடக்க ஆட்டக்காரராக வந்த கே.எல்.ராகுல் சிறப்பாக விளையாடினார். இதனால், ஷிகர் தவானுடன் கே.எல்.ராகுல் தான் தொடக்க ஆட்டக்காரராக இருப்பார் என்றும் கூறப்படுகிறது.
அதேபோல இந்திய அணியின் முன்னணி பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் காயத்தில் இருந்து மீண்டுள்ளதால் தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!