Sports
''மாற்று அணிகளில் இருந்து வீரர்களை தட்டிப்பறித்த மும்பை இந்தியன்ஸ் அணி” - புதிய யுக்தி பலன் தருமா?
ஐ.பி.எல் தொடரின் அடுத்த சீசனை முன்னிட்டு வீரா்களின் பரிமாற்றம் சமீபத்தில் முடிவடைந்தது. ஐ.பி.எல் அணி நிா்வாகங்கள் தங்களுக்கு தேவையான வீரா்களை மாற்றியும், அணியிலிருந்து விடுவிக்க வேண்டிய வீரர்களையும் விடுவித்துள்ளது.
பல வீரர்கள் ஏற்கனவே விளையாடி வந்த அணியில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி அணியிலிருந்து ட்ரென்ட் போல்டையும், ராஜஸ்தான் அணியிலிருந்து தவல் குல்கர்னியையும் வாங்கியுள்ளது. மேலும், யுவராஜ் சிங், எவின் லெவிஸ், பெரெண்டர்ஃப், பென் கட்டிங் உள்ளிட்ட பத்து வீரர்களை விடுவித்துள்ளது.
இந்நிலையில், அணியில் ட்ரென்ட் போல்டை அணியில் இணைந்தது குறித்து அந்த அணியின் இயக்குநர் ஜாகீர்கான் கூறுகையில், இந்த ஆண்டு எங்களுக்கு வித்தியாசமான ஒன்று. காயம் காரணமாக எங்களுக்கு சில சவால்கள் ஏற்பட்டுள்ளன.
ஹர்டிக் பாண்டியா, பும்ரா ஆகியோர் காயத்தால் அவதிப்பட்டுள்ளனர். இதனால், வேகபந்துவீச்சை பலப்படுத்த வேண்டும் என்பதை கருத்தில் கொன்டே ட்ரெண்ட் போல்ட் மற்றும் தவல் குல்கர்னியைத் தேர்வு செய்தோம் என கூறியுள்ளார்.
முதுகுவலி காரணமாக அவதிப்பட்டு வந்த ஆல்ரவுண்டர் ஹர்டிக் பாண்டியாவுக்குக் கடந்த மாதம் லண்டனில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அதேபோல பும்ராவுக்கு கழுத்தின் கீழ்பகுதியில் முறிவுக்காக அவர் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஐ.பி.எல் போட்டிக்கான ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி நடைபெற உள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?