Sports
“ரோஹித் செய்வதை விராட் கோலியால் கூட செய்ய முடியாது” - சேவாக் புகழாரம்!
வங்கதேச அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் விளையாடி வருகிறது.
இதில் டெல்லியில் நடைபெற்ற முதல் T20 போட்டியில் வங்கதேச அணி வெற்றி பெற்றது. இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 153 ரன்கள் குவித்தது.
வங்கதேச அணி தரப்பில் நைம் 36 ரன்களும், லிட்டன் தாஸ் 29 ரன்களும், மஹ்மதுல்லா 30 ரன்களும் குவித்தனர். இந்திய அணி தரப்பில் சாஹல் 2 விக்கெட்டும் தீபக் சாஹர், சுந்தர், கலீல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
அதன் பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. துவக்க வீரரான ரோகித் சர்மா மற்றும் தவான் சிறப்பான துவக்கத்தை அளித்து முதல் விக்கெட்டுக்கு 118 ரன்கள் சேர்த்தனர். சிறப்பாக விளையாடிய ரோகித் சர்மா 43 பந்துகளில் 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் இந்திய அணி 18.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது. அதிரடியாக விளையாடிய கேப்டன் ரோகித் சர்மா ஆட்ட நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச்சென்ற கேப்டன் ரோஹித் சர்மாவை முன்னாள் இந்நாள் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். அவ்வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக், ரோஹித் சர்மாவை பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ''ஒரு ஓவரில் 3-4 சிக்ஸர்களை அடிப்பது அல்லது 45 பந்துகளில் 80-90 ரன்கள் எடுப்பதெல்லாம் மிகப்பெரிய கலை. அனைவருக்கும் இது வராது.
விராட் கோலி கூட இப்படியெல்லாம் விளையாடியது கிடையாது. ஆனால் ரோஹித் சர்மா தொடர்ச்சியாக இதுபோல விளையாடி வருகிறார். சச்சின் டெண்டுல்கர் அப்போது செய்ததை தற்போது ரோஹித் சர்மா செய்கிறார்'' என்று தெரிவித்தார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?