Sports
IndVsBan - அணியில் நீண்ட நாட்களுக்குப் பிறகு இடம்பிடித்த CSK வீரர் : ஓய்வில் கோலி, கேப்டனான ரோஹித் சர்மா
வங்கதேசம் அணி நவம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. 3 போட்டிகள் கொண்ட T20 தொடரிலும், 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரிலும் வங்கதேச அணி விளையாட உள்ளது.
இந்நிலையில் இன்று இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்திய வீரர்களை அறிவித்துள்ளது.
T20 தொடரில் சஞ்சு சாம்சன் மற்றும் ஆல்ரவுண்டர் சிவம் துபே ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், ரோஹித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஹர்திக் பாண்டியாவிற்கு காயம் காரணமாக ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஷர்துல் தாக்கூர் நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பிடித்துள்ளார்.
தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய அணி :
ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கே.எல் ராகுல், சஞ்சு சாம்சன், ஷ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர், க்ருனால் பாண்டியா, யுஸ்வேந்திர சாஹல், ராகுல் சாகர், தீபக் சாகர், கலீல் அகமது, சிவம் துபே, ஷர்துல் தாக்கூர்
டெஸ்ட் தொடருக்கான அணியில், தென் ஆப்பிரிக்காவிற்கு எதிராக விளையாடிய 15 பேர் கொண்ட அணியே தேர்வு செய்யப்பட்டுள்ளது. கடைசி போட்டியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக விளையாடிய சபாஷ் நதீம் மீண்டும் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் தேர்வு செய்யப்படவில்லை. T20 தொடரில் ஓய்வு அளிக்கப்பட்ட கோலி டெஸ்ட் தொடருக்கான அணியில் இடம்பெறுள்ளார்.
டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி :
விராட் கோலி, ரோஹித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா , ரகானே, ஹனுமா விகாரி, சஹா, ஜடேஜா, அஸ்வின், குல்தீப் யாதவ், சாமி, உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, சுப்மன் கில், ரிஷப் பண்ட்
இந்தியா- வங்கதேச தொடர் அட்டவணை:
T20 தொடர் :
நவம்பர் 3, 2019 முதல் T20 , டெல்லி
நவம்பர் 7, 2019 இரண்டாவது T20 , ராஜ்கோட்
நவம்பர் 10, 2019 மூன்றாவது T20 , நாக்பூர்
டெஸ்ட் தொடர்:
நவம்பர் 14 - 18 முதல் டெஸ்ட், இந்தூர்
நவம்பர் 22 - 26 இரண்டாவது டெஸ்ட், கொல்கத்தா
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!