Sports
ஐ.பி.எல் அணிக்கு பயிற்சியாளராகும் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே!
இந்திய முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தார். 2017ம் ஆண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பிறகு கேப்டன் விராட் கோலியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பதவியிலிருந்து விலகினார்.
இந்நிலையில், கிங்ஸ் லெவன் பஞ்சாப், முன்னாள் இந்திய வீரரான அனில் கும்ப்ளேவை பயிற்சியாளர் பதவியில் நியமிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை ஐ.பி.எல் கோப்பையை வென்றதில்லை. கடந்த இரண்டாண்டுகளாக அந்த அணி பிளே - ஆஃப் கூட செல்லவில்லை.
இதை அடுத்து அந்த அணியில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. அந்த அணியின் கேப்டன் அஸ்வின் வேறு அணிக்கு டெல்லி அணிக்கு மாற உள்ளதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில், பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த மைக் ஹெசன் தனது பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
புதிய பயிற்சியாளரை தேடும் புஞ்சாப் அணி கும்ப்ளேவை பயிற்சியாளராக்க முடிவு செய்துள்ளது. ஏனெனில், அனில் கும்ப்ளே கிரிக்கெட் வீரராக மட்டுமின்றி, பயிற்சியாளராகவும் அவர் சிறப்பாக செயல்பட்டுள்ளார். இந்திய அணி மட்டுமின்றி, மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் உள்ளிட்ட ஐ.பி.எல் அணிகளுக்கும் அவர் பயிற்சி அளித்துள்ளார்.
தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணில் கும்ப்ளே பரீசீலனையில் உள்ளார். அதேநேரத்தில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முன்னாள் வீரர் ஜார்ஜ் பெய்லியை பேட்டிங் பயிற்சியாளராக்க அந்த அணி நிர்வாகம் பரிசீலித்து வருகிறது.
இன்னும் சில தினங்களில் பஞ்சாப் அணியின் போர்டு மீட்டிங் கூட உள்ளது. அதில் அனில் கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமிக்க அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. அதேநேரத்தில், பயிற்சியாளர் பொறுப்பை கும்ப்ளே ஏற்றுக்கொள்ளாவிட்டால் ஆன்டி பிளவர், டேரன் லேஹ்மன் உள்ளிட்டோரை அடுத்த கட்ட தேர்வாக பஞ்சாப் அணி வைத்துள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?