Sports
விராட் கோலிக்கு அது சிரமம்; ரோஹித்திடம் பொறுப்பை கொடுக்கலாம் - யுவராஜ் சிங்!
கடந்த 2017ம் ஆண்டு முதல் இந்திய அணியின் மூன்று வகை கிரிக்கெட்டுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார் விராட் கோலி. கோலியின் தலைமையின் கீழ் தற்போது வரை இந்திய அணி சிறப்பாகவே விளையாடி வருகிறது.
இருந்த போதும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அரையிறுதியில் தோற்று வெளியேறியதை அடுத்து, இந்திய அணியின் கேப்டன் பதவியில் மாற்றம் செய்ய வேண்டுமென முன்னாள் வீரர்கள், ரசிகர்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் யுவராஜ் சிங்கிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது. “முன்பெல்லாம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆகிய இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகள் மட்டுமே நடைப்பெற்று வந்தன. தற்போது டி20 உட்பட மூன்று விதமான போட்டிகள் நடத்தப்படுகின்றன.
மூன்று விதமான போட்டிகளிலும் கேப்டனாக இருப்பது சிரமமான ஒன்று தான். விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேன். எனவே ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி கேப்டனாக செயல்பட வைத்து T20 போட்டிகளுக்கு ரோகித் சர்மாவை கேப்டனாக நியமிக்கலாம். ஏனெனில் இந்திய அணியின் கேப்டனாக அவ்வப்போது கிடைக்கும் வாய்ப்புகளில் ரோகித் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மேலும் ஐ.பி.எல் தொடரிலும் அவர் கேப்டனாக தன்னை நிரூபித்துள்ளார்.
T20 போட்டிகளுக்கு ரோஹித் சர்மாவை கேப்டனாக நியமித்தால் விராட் கோலிக்கு சற்று ஓய்வு கிடைக்கும். இதுகுறித்து அணி நிர்வாகம் தான் முடிவெடுக்க வேண்டும்“ என்று கூறினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?