Sports
3-வது டி20 தென்னாப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி : சமனில் முடிந்தது தொடர்!
இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
ரோகித் சர்மா 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து விராட் கோலி களம் இறங்கினார். தவான் அதிரடியாக விளையாடினாலும், மறுமுனையில் விராட் கோலி ரன்கள் சேர்க்க திணறினார். அதிரடியாக விளையாடி தவான் 25 பந்தில் 4 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 36 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
தவான் ஆட்டமிழந்த சிறிது நேரத்தில் விராட் கோலி 15 பந்தில் 9 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து ரிஷப் பண்ட் 19 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 5 ரன்னிலும், க்ருணால் பாண்டியா 4 ரன்னிலும் வரிசையாக வெளியேறினர்.
ஜடேஜா 19 ரன்கள், வாஷிங்டன் சுந்தர் 4, ஹர்டிக் பாண்டியா 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் ரபாடா 3 விக்கெட்டும், பார்ச்சுன் மற்றும் ஹென்ரிக்ஸ் தலா இரண்டு விக்கெட்கள் வீழ்த்தினர்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி, அதிரடியாக ஆடியது. ஹேண்ட்ரிக்ஸ் 28(26) ரன்களில் வெளியேற,மறுமுனையில் அதிரடி காட்டிய டி காக் தனது அரை சதத்தை பதிவு செய்தார்.
அடுத்து களமிறங்கிய பவுமாவுடன் ஜோடி சேர்ந்த டிகாக் அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார்.தென் ஆப்பிரிக்க அணி 16.5 ஒவர்களில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 140 ரன்கள் சேர்த்தது. இஇதன்மூலம் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி அபார வெற்றிபெற்றது. இதன்மூலம் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடர் 1-1என சமனில் முடிந்தது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!