Sports
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக க்ளீன் ஸ்வீப் அடித்த இந்தியா : தோனியை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி சாதனை!
இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி கிங்ஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்சில் இந்திய அணி 416 ரன்கள் குவித்தது. இந்திய அணி தரப்பில் விஹாரி அதிகபட்சமாக 111 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் 117 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பும்ரா அதிகபட்சமாக 6 விக்கெட்கள் வீழ்த்தினார். இதையடுத்து 299 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 168 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியது. இந்திய அணி பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அந்த அணி 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இந்திய அணித்தரப்பில் முகமது ஷமி மற்றும் ஜடேஜா தலா 3 விக்கெட்களை வீழ்த்தினர். முதல் இன்னிங்ஸில் சதம், இரண்டாம் இன்னிங்சில் அரைசதம் என மொத்தம் 164 ரன்கள் குவித்த ஹனுமா விஹாரி ஆட்ட நாயகனாக தேர்வானார்.
இந்த வெற்றியின் மூலம், இந்திய அணிக்கு அதிக டெஸ்ட் வெற்றிகளை ஈட்டித் தந்த கேப்டன்களில் விராட் கோலி புதிய சாதனை படைத்துள்ளார். 48 போட்டிகளுக்கு தலைமை தாங்கிய கோலி 28 போட்டிகளில் வெற்றிபெறுள்ளார். 27 வெற்றிகளுடன் தோனி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
மேலும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக T-20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டெஸ்ட் என மூன்று வகையான தொடர்களையும் இந்தியா வென்று சாதனை படைத்துள்ளது.
Also Read
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!
-
தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் தொழில் வளர்ச்சி! : தினத்தந்தி நாளிதழ் புகழாரம்!