Sports
பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் 5 விக்கெட் கைப்பற்றிய பும்ரா : புதிய உலக சாதனை!
மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. ஆண்டிகுவாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 318 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
முதல் இன்னிங்சில் பெரிய அளவில் சாதிக்காத இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். இரண்டாவது இன்னிங்ஸில் பும்ரா 8 ஓவர்கள் பந்து வீசி 7 ரன் மட்டுமே விட்டுக் கொடுத்து, 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதன் மூலம் குறைந்த ரன்கள் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார் பும்ரா. இதற்கு முன்னதாக, வெங்கடபதி ராஜு 1990ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக சண்டிகரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 12 ரன்கள் கொடுத்து 6 விக்கெட் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. இந்தச் சாதனையை முறியடித்துள்ளார் பும்ரா. ஹர்பஜன் சிங் 13 ரன்கள் கொடுத்து 5 விக்கெட் கைப்பற்றியது மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.
25 வயதான ஜஸ்பிரிட் பும்ரா இதுவரை 11 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்றிருக்கிறார். அவற்றில் 4 போட்டிகளில் 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார். இந்தச் சாதனைகள் அனைத்தையும் வெவ்வேறு நாடுகளுக்கு எதிராக நிகழ்த்தியுள்ளார் பும்ரா.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் சுற்றுப்பயணத்தின்போது ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் பும்ரா. தொடர்ந்து இங்கிலாந்துக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும், ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
தற்போது, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான சுற்றுப்பயணத்திலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தியுள்ளார் பும்ரா. மேற்கண்ட நான்கு அணிகளுக்கு எதிராக அந்நாட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் ஆசிய பந்துவீச்சாளர் எனும் வரலாற்றையும் படைத்துள்ளார் பும்ரா.
மேலும், இதுவரை மேற்கொண்ட அனைத்து (4) சுற்றுப்பயணங்களிலும் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய பெருமையையும் தனதாக்கியுள்ளார் பும்ரா. தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் பும்ராவுக்கு ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?