Sports
பயிற்சியாளர்களை அதிரடியாக மாற்றிய பெங்களூரு அணி : ஈ சாலா கப் நம்தே ?
ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடைபெற்ற ஐ.பி.எல் தொடர்களில் பெங்களூரு, பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் இதுவரை கோப்பையை வென்றதில்லை. பெங்களூரு அணியில் கோலி, டிவில்லியர்ஸ் உள்ளிட்ட பல நட்சத்திர வீரர்கள் இருந்தும் அந்த அணி இதுவரை கோப்பை வாங்கியதில்லை.
வருடந்தோறும் புது வீரர்களை வாங்கியும், பயிற்சியாளர்களை மாற்றியும் அந்த அணிக்கு பலனளிக்கவில்லை. இந்நிலையில், பெங்களூரு அணியின் பயிற்சியாளர்களாக உள்ள கேரி கிறிஸ்டன் மற்றும் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பெங்களூரு அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், பெங்களூரு அணியின் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா ஆகியோர் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.
மேலும், கொல்கத்தா அணியின் முன்னாள் பயிற்சியாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரருமான சைமன் கேடிச் பெங்களூரு அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல், நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் பஞ்சாப் அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளரான மைக் ஹெசன் அணியின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து பேசிய பெங்களூரு அணியின் சேர்மன், ''மைக் ஹெசன் மற்றும் சைமன் கேடிச்சின் அனுபவம் பெங்களூரு அணிக்குள் வெற்றி பண்பாட்டை வளர்த்தெடுக்கும்'' எனத் தெரிவித்துள்ளார். பெங்களூரு அணி இவர்களது பயிற்சியின் கீழ் பெங்களூரு அணி இம்முறை கோப்பையை வெல்லும் என பெங்களூரு அணி ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?