Sports
ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடை 7 ஆண்டுகளாகக் குறைப்பு : ஆனாலும் ஒரு சிக்கல் இருக்கிறதே..!
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக இருந்தவர் ஸ்ரீசாந்த். கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ராஜஸ்தான் அணிக்காக ஆடியபோது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
இதனையடுத்து கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுக்கப்பட்டார். இருப்பினும் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் அணியில் விளையாட பி.சி.சி.ஐ வாழ்நாள் தடை விதித்தது.
இதன் பின்பு கிரிக்கெட் தொடர்பாக எதிலும் பங்குபெறாத ஸ்ரீசாந்த் திரைப்படத்தில் நடித்து, இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தால் பி.சி.சி.ஐ-யின் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி டி.கே. ஜெயின், ஸ்ரீசாந்தின் வாழ்நாள் தடையை 7 ஆண்டுகளாகக் குறைத்துள்ளார்.
2013ம் ஆண்டு செப்டம்பர் 13ம் தேதி அனைத்து விதமான கிரிக்கெட் போட்டியில் இருந்தும் விடுவிக்கப்பட்ட ஸ்ரீசாந்த், அடுத்த ஆண்டு செப்டம்பர் 13ம் தேதிக்கு பிறகு கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு ஸ்ரீசாந்துக்கு ஆறுதலை கொடுத்திருந்தாலும், அடுத்த ஆண்டுக்குள் 37 வயதை எட்டவுள்ளதால் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு குறைவாகவே இருக்கும்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்