Sports
மைதானத்தில் அதிரடி சரவெடி காட்டிய இளம் வீரர் - இந்திய அணியின் எதிர்காலமே இவர்தான் என புகழ்ந்த கோலி !
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று T20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி உள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கடைசிப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், இந்திய அணியின் இளம் பந்துவீச்சாளர் தீபக் சஹர் 3 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.
அதேபோல் பேட்டிங்கில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட் 65 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார். இந்திய அணி 27 ரன்களுக்குள் 2 விக்கெட்களை இழந்த நிலையில், கேப்டன் கோலியுடன் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி அரைசதம் அடித்தார்.
வெற்றிக்கு பின்னர் பேசிய கேப்டன் கோலி, ”எல்லா வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்க நினைத்தோம், ஆனால் போட்டியை வெல்வது தான் குறிக்கோளாக இருந்தது. புதிய பந்தில் புவனேஷ்வர் குமார் எந்த அளவுக்கு திறமையாக வீசுவாரோ, அதையே தான் தீபக் சஹரும் செய்கிறார்.
புதிய பந்தில் எதிர்பார்த்ததை விட அற்புதமாக பந்துவீசினார். நிச்சயமாக ரிஷப் பண்ட்டை நாங்கள் இந்திய அணியின் எதிர்காலமாகப் பார்க்கிறோம். அவருக்கு அதிகப்படியான திறமை உள்ளது. இதேபோல் அவர் சீராக ஆடி அணிக்கு வெற்றியை தேடித் தந்தால் அது அணிக்கு வலுவாக அமையும்.
நாங்கள் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் சிறப்பாக ஆடினோம். ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இதே போன்று விளையாட வேண்டும் என்று இருக்கிறோம். ஒருநாள் கிரிக்கெட்டில் மேற்கிந்தியத் தீவுகள் மிகவும் வலுவான அணி. எனவே அந்த போட்டிகளில் மிகவும் கடினமானதாக இருக்கலாம். ஆனாலும் அதை சிறப்பாக எதிர்கொள்வோம்'' என்று குறிப்பிட்டார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்