Sports
நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸி விளையாட தடை : அதிர்ச்சியில் கால்பந்து ரசிகர்கள் !
தென்னமெரிக்க கால்பந்து அணிகளுக்கு இடையே கடந்த சில நாட்களுக்கு முன் கோபா அமெரிக்க கால்பந்து தொடர் நடைபெற்றது. இதன் அரையிறுதியில் அர்ஜெண்டினா-பிரேசில் மோதின. அந்த ஆட்டத்தில் அர்ஜெண்டின அணிக்கு 2 பெனால்டி வாய்ப்புகள் மறுக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த அர்ஜெண்டினா வீரர் மெஸ்ஸி, கோபா அமெரிக்காவை பிரேசிலுக்கே எழுதிவைத்துவிட்டனர் என்றும், நடுவர்கள் பெரிய தொகையை வாங்கிவிட்டு சாதகமாக செயல்படுகின்றனர் என்றும் பேசினார்.
இதையடுத்து, ஜூலை 6ஆம் தேதி நடைபெற்ற 3வது மற்றும் 4வது இடத்திற்கான ஆட்டத்தில் அர்ஜெண்டினா-சிலி அணிகள் மோதின. இந்த போட்டியில் 2க்கு1 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா வெற்றி பெற்று 3வது இடம் பிடித்தது. ஆனாலும், இந்த போட்டியில் சிலி அணி வீரர் கேரி மெடெலுக்கும்(Gary Medel), மெஸ்ஸிக்கும் மோதல் ஏற்பட்டதால், போட்டியின் போது நடுவரால் சிகப்பு அட்டை காட்டப்பட்டு மெஸ்ஸி வெளியேற்றப்பட்டார். போட்டி முடிந்ததும், மீண்டும் குற்றம் சாட்டி பேசிய மெஸ்ஸி, பதக்கத்தை பெறுவதற்கும் வரவில்லை.
ஆகையால், மெஸ்ஸி சர்வதேச போட்டிகளில் 3 மாதம் பங்கேற்க கூடாது என தடை விதிக்கப்பட்டதோடு, 50,000 டாலரும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. தனக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து மெஸ்ஸி மேல்முறையீடு செய்ய 7 நாட்கள் அவகாசம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையால், உலகக்கோப்பை தகுதிச்சுற்றில் மெஸ்ஸி விளையாடுவதற்கு எந்த பாதிப்பும் இருக்காது. ஆனால், 7 நாட்களுக்குள் ஏதும் மாற்றமில்லை என்றால், அடுத்து வரக்கூடிய சிலி, மெக்சிகோ, ஜெர்மனி அணிகளுக்கு எதிரான நட்பு ரீதியிலான ஆட்டத்தில் மெஸ்ஸி விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அர்ஜெண்டின நட்சத்திர வீரரும், உலகின் தலைசிறந்த கால்பந்தாட்ட வீரருமான மெஸ்ஸிக்கு விளையாட தடை விதிக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!