Sports
ஸ்மித் , நாதன் லயன் அசத்தல் : 251 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி!
இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி எட்பஸ்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங் தேர்வு செய்தது. ஸ்மித்தின் (144) சதத்தால் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 284 ரன்கள் சேர்த்தது.
பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இங்கிலாந்து அணி பேர்ன்ஸ் (133) சதத்தால் 374 ரன்கள் குவித்தது. 90 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா ஸ்மித் (142) மற்றும் மேத்யூ வேட் (110) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலிய 487 ரன்கள் குவித்து 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி களமிறங்கியது. நேற்றைய நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 13 ரனகள் எடுத்திருந்தது. இன்று கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது.
ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 146 ரன்னில் சுருண்டது. இரண்டாவது இன்னிங்ஸில் நாதன் லயன் 6 விக்கெட்டுகளையும் பேட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனால் ஆஸ்திரேலியா 251 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இரு இன்னிங்சிலும் சதமடித்த ஸ்மித் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
Also Read
-
இராமேஸ்வரம் To காசி - தமிழ்நாடு அரசின் ஆன்மீக சுற்றுலாவுக்கு யார் யார் விண்ணப்பிக்கலாம்? - விவரம்!
-
“கோவை மக்களின் அன்பு!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!
-
துணை முதலமைச்சர் உதயநிதி குறித்து அவதூறு... எச்.ராஜாவுக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி !
-
”2026-தேர்தலிலும் தி.மு.க உடன் தான் கூட்டணி” : வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் திட்டவட்டம்!
-
468.89 ஏக்கர் நிலங்கள் நில எடுப்பிலிருந்து விலக்கு : விடுவிப்பு ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்