Sports
உலக சாம்பியன்களுக்கு என்ன ஆச்சு?: 85 ரன்களுக்கு ஆல் அவுட்; அயர்லாந்திடம் மரண அடி வாங்கிய இங்கிலாந்து!
நடைப்பெற்று முடிந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணி இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி முதல் முறையாக உலகசாம்பியன் பட்டத்தை வென்றது.
உலகக் கோப்பை முடிந்து இரண்டு வாரங்கள் ஆன நிலையில் அயர்லாந்து அணி தற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது. லார்ட்ஸ் மைதானத்தில் இன்று தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இந்தப்போட்டியில், ஜேசன் ராய் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஆலி ஸ்டோன் இங்கிலாந்து அணிக்காக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்கள். ஜோ ரூட் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்கும் வகையில் ராய் முதலில் வெளியேறினார். முர்டாக், ஜேசன் ராயை 5 ரன்களில் வெளியேற்றினார். அடுத்து டென்லியை 23 ரன்களில் வெளியேற்றினார் அடைர். பின்னர் களமிறங்கிய, ஜோ டென்லி, அடேர் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் ஜோ ரூட் 2 ரன்கள் எடுத்தார்.
இங்கிலாந்து அணியின் ஜானி பேர்ஸ்டோவ், கிறிஸ் வோக்ஸ் மற்றும் மொயீன் அலி, வரிசையாக களமிறங்கி டக் அவுட் ஆனார்கள். இங்கிலாந்து அணி 36 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்து 43 ரன்களுக்கு 7 விக்கெட்கள் என்ற நிலைக்கு சென்றது. சாம் கரன் மற்றும் ஸ்டோன் மட்டும் ரன் குவிக்கவில்லை என்றால் இங்கிலாந்து அணியின் நிலைமை இன்னும் மோசமானதாக இருந்திருக்கும்.
ஜோ டென்லி, சாம் குர்ரான் மற்றும் அறிமுக வீரர் ஆலி ஸ்டோன் ஆகியோர் மட்டுமே இங்கிலாந்து அணி தரப்பில் இரட்டை இலக்கத்தை தாண்டி ரன் எடுத்தனர். மூன்று ஆண்டுகளில் நான்காவது முறையாக மதிய உணவிற்குள் 10 விக்கெட்டுகளையும் இழந்துள்ளது இங்கிலாந்து அணி. இங்கிலாந்து அணி 23.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 85 ரன்களில் முதல் இன்னிங்சை முடித்துக் கொண்டது.
அயர்லாந்து அணி தரப்பில், முர்டாக் 5 விக்கெட், அடைர் 3 விக்கெட்கள், ரான்கின் 2 விக்கெட் வீழ்த்தினர். உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் பெற்ற இங்கிலாந்து அயர்லாந்திடம் இவ்வாறு சுருண்டு இருப்பது கண்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆஷஸ் தொடங்குவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, இங்கிலாந்து அணியின் பேட்டிங்கின் பலவீனம் பட்டவர்த்தனமாக வெளிவந்துள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!