Sports
ஒரே மாதத்தில் ஐந்து தங்க பதக்கம் : இந்தியாவின் புதிய தங்க மங்கை 'ஹிமா தாஸ்'!
சர்வதேச தடகள அரங்கில் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்து வருகிறார் அசாமை சேர்ந்த ஹீமா தாஸ். செக் குடியரசில் தபோர் அட்லெட்டிக் மீட் நடைபெற்றது. அதில் 400 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றார் ஹீமா தாஸ். நேற்று (21.07.209) நடைப்பெற்ற போட்டியில் 52.09 விநாடியில் 400 மீட்டரை கடந்து அசத்தினார் ஹீமா தாஸ்.
கடந்த ஆண்டு ஆசிய தடகளப் போட்டியில் ஹீமா தாஸ் 400 மீட்டர் தூரத்தை 50.79 வினாடிகளில் கடந்தது குறிப்பிடத்தக்கது.ஐரோப்பாவில் ஜூலை 2 ஆம் தேதி முதல் போட்டிகளில் பங்கேற்கும் வரும் ஹீமா தாஸ் வெல்லும் ஐந்தாவது தங்கம் இதுவாகும்.
ஜூலை 2ம் தேதி நடைபெற்ற போஸ்னான் தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் 200 மீட்டரை 23.65 வினாடியில் கடந்து தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். ஜூலை 7ம் தேதி போலாந்தின் குட்னோ தடகள போட்டியில் 200 மீட்டர் பந்தயத்திலும் தங்கம் வென்றார் ஹீமா. கிளாட்னோவில் நடந்த கிளாட்னோ தடகள போட்டியிலும் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தங்கம் வென்றிருந்தார் ஹீமா தாஸ். கடந்த புதன்(17.07.2019) அன்று செக் குடியரசில் தபோர் அட்லெட்டிக் மீட்டில் 200 மீட்டர் ஓட்ட பந்தயத்தில் தனது நான்காவது தங்கபதக்கத்தை வென்றார் ஹீமா தாஸ்.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!