Sports
இந்திய கிரிக்கெட் அணியில் தொடரும் குழப்பம் : மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக விளையாடப்போவது யார் ?
இந்திய கிரிக்கெட் அணி ஆகஸ்ட் 3 முதல் செப்டம்பர் 3 வரை மேற்கிந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. அப்போது, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது.
இத்தொடருக்கான வீரர்கள், எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வுக்குழு மும்பையில் இன்று தேர்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் தேர்வுக் குழு கூட்டத்தை பிசிசிஐ ஒத்திவைத்துள்ளது. சனிக்கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை தேர்வுக்குழு கூட்டம் நடைபெறும் என கூறப்படுகிறது. வீரர்களின் உடற்தகுதி தொடர்பான அறிக்கைகள் சனிக்கிழமை காலைதான் கிடைக்கும் என்பதால் இந்த தாமதம் என்று கூறப்படுகிறது.
உலகக் கோப்பை தோல்வியை அடுத்து, ஒருநாள் மற்றும் டி20 போட்டியின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட வேண்டும் என்று பலதரப்பிலும் குரல் எழுந்தது. இந்தக் குரல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் மேற்கிந்திய தீவுகளுக்கான இந்திய சுற்றுப்பயணத்தில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தற்போது வெளிவரும் தகவல்களின் படி அவர் இந்த தொடரில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
அதை விட முக்கியமானதாக, தோனி அணியில் இடம் பெறுவாரா என்பது பெரும் கேள்வியாக விவாதத்தை எழுப்பியது. அப்படியே அணியில் சேர்க்கப்பட்டாலும், இரண்டாம் கீப்பராக தான் இருப்பார் என்றும் வெளி வந்த தகவல்கள் யூகங்களுக்கு பரபரப்பு சேர்த்தது. மேலும், உலகக் கோப்பை தொடரில் தங்களை நிரூபிக்க தவறியவர்களை அணியில் இருந்து நீக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படும் நிலையில், தற்போது அணி தேர்வுக் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது கூடுதல் யூகங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
ஜார்க்கண்ட் தேர்தல் முடிவு : சொல்லி அடித்த இந்தியா கூட்டணி - கடும் பின்னடைவில் பா.ஜ.க!
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலமையிலான திராவிட மாடல் ஆட்சியில் போக்குவரத்துத்துறை சாதனைகள்... - பட்டியல்!
-
”தமிழ்நாடும் தமிழினமும் ‘கலைஞர் 1000’கூட கொண்டாடும்” : பெருமையுடன் சொன்ன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!