Sports
உலகக்கோப்பை 2019 : இறுதிப்போட்டியை காண அழைக்கப்பட்ட அந்த வீரர்; அப்போ அந்த விருது அவருக்கு தானா?
உலகக்கோப்பை தொடர் கடந்த 30ம் தேதி தொடங்கி இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. உலகக்கோப்பையின் இறுதி போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு இடையேயான இறுதி போட்டியை காண வங்கதேச அணி வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கான காரணம் இதுவரை கூறப்படவில்லை.
ஒருவேளை இவருக்கு உலகக்கோப்பை தொடர் நாயகன் விருது வழங்கப்படலாம் என்று கூறுகிறார்கள். ஷகிப் அல் ஹசன் வங்கதேசம் அணிக்கு தனி ஆளாக வெற்றிகளை பெற்று தந்தார். இந்த தொடர் முழுக்க எல்லா அணிகளுக்கு எதிராகவும் இவர் அதிரடியாக ஆடினார். 9 போட்டிகளில் ஆடிய இவர் இரண்டு சதம், ஐந்து அரைசதம் விளாசி 606 ரன்களை எடுத்துள்ளார்.
பேட்டிங்கில் மட்டும் ஜொலிக்கவில்லை ஷகிப் அல்-ஹசன், பந்துவீச்சில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆனால், துரதிஷ்டவசமாக அவரது அணி அரையிறுதிக்கு முன்னேறாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. உலகக்கோப்பையில் ஷாகிப் அல் ஹசன் மட்டும்தான் விக்கெட்டும் எடுத்து, ரன்களையும் குவித்துள்ளார். இதனால் அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்க வாய்ப்பு உள்ளது. அதனாலேயே அவர் இறுதிப் போட்டியை காண அழைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!