Sports

உலகக்கோப்பை 2019 : இந்தியா தோற்றதுக்கு யார் காரணம் ! - உண்மையைச் சொன்ன இங்கிலாந்து கேப்டன்

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. நேற்று முன்தினம் நடைப்பெற்ற இரண்டாவது அரையிறுதியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இங்கிலாந்து கேப்டன் இயான் மோர்கன், “ இந்தியா – நியூஸிலாந்து அணிகள் இடையிலான அரை இறுதி ஆட்டத்தை நாங்கள் பயிற்சிக்கு செல்லும் வரை பார்த்தேன். கிரிக்கெட்டின் சிறந்த ஆட்டம் அது. நியூஸிலாந்து வீரர்கள் அற்புதமாக பந்து வீசினார்கள். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டனர்.

நியூசிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம். நியூஸிலாந்து அணி இந்தத் தொடர் முழுவதுமே வீழ்த்துவதற்கு கடினமான அணியாக திகழ்ந்து வருகிறது என்றே நினைக்கிறேன். நியூசிலாந்து இந்த தொடர் முழுவதும் அனேகமாக தோற்கடிக்க கடினமான ஒரு அணியாக இருந்திருக்கிறது. இந்தியாவுக்கு எதிரான அரைஇறுதியில் சிறப்பாக ஆடினார்கள். இறுதிப்போட்டியில் அவர்களை வீழ்த்துவது எளிதல்ல. ஆனால் சவாலை எதிர்கொள்ள தயாராக உள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.