Sports
உலகக்கோப்பை தோல்வி எதிரொலி : இந்திய அணியிலிருந்து கல்தா கொடுக்கப்படும் முக்கிய புள்ளி !
உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.
தற்போது இருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர்களின் பதவிக்காலம் உலகக்கோப்பை தொடருடன் முடிந்தது. அதன்படி தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, பவுலிங் பயிற்சியாளர் பாரத் அருண், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிக்க வாய்ப்புள்ளது. இந்த உலகக் கோப்பை தொடர் முழுக்க இந்திய அணியின் பவுலிங் மற்றும் பீல்டிங்கும் மிக சிறப்பாக இருந்தது.
ஆனால் இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் சரியாக செயல்படவில்லை. இவரின் பயிற்சிக்கு கீழ் இந்திய பேட்டிங் சரியாக செயல்படவில்லை. 4ம் இடத்திற்கு சரியான வீரரை தேர்ந்தெடுக்க வில்லை என பல குற்றசாட்டுகள் உள்ளது. இதனால் சஞ்சய் பங்கர் பதவியை பி.சி.சி.ஐ நீட்டிக்க வாய்ப்பில்லை என்கிறார்கள். சஞ்சய் பங்கர் எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Also Read
-
”2026 தேர்தலிலும் திமுகவே வெல்லும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!