Sports

“ஏன் அப்படி செய்தீர்கள்?” : பி.சி.சி.ஐ கேள்வியால் சிக்கலில் ரவி சாஸ்திரி & கோலி!

உலகக் கோப்பை தொடரில் இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து நிர்ணயித்த 240 ரன்களை எட்ட முடியாமல் இந்தியா 221 ரன்னில் ஆட்டமிழந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணியின் தோல்விக்கு ரசிகர்கள் பல்வேறு காரணங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், உலகக்கோப்பை அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாக குழு 3 கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதில், அணியில் அம்பத்தி ராயுடு சேர்க்கப்படாதது ஏன், தோனி ஏன் அரையிறுதியில் 7வது வீரராக களமிறக்கப்பட்டார், அணியில் ஏன் 3 விக்கெட் கீப்பர்கள் என 3 முக்கிய கேள்விகளை பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு முன்வைத்துள்ளது. இதுகுறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி மற்றும் இந்திய அணியின் கேப்டன் கோலி இருவரும் விளக்கமளிக்க பி.சி.சி.ஐ நிர்வாகக்குழு உத்தரவிட்டுள்ளது.

இந்திய அணியினர் இங்கிலாந்திலிருந்து ஞாயிறன்று புறப்படுகிறார்கள். அதன்பின்னர் பி.சி.சி.ஐ-யின் கேள்விக்கு கோலியும், ரவி சாஸ்திரியும் பதிலளிப்பார்கள் என கூறப்படுகிறது. இந்தியாவின் தோல்விக்குப் பிறகு அணியில் நிறைய மாற்றங்கள் செய்யப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.