Sports
தொடர் தோல்வி எதிரொலி : பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்யுமாறு ரசிகர்கள் கோரிக்கை!
கடந்த 16-ஆம் தேதி நடந்து முடிந்த இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. உலகக் கோப்பையில் இந்தியாவிடம் பாகிஸ்தான் தொடர்ந்து 7வது முறையாக தோல்வியைச் சந்திக்கிறது.
உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி வெறும் 3 புள்ளிகளை மட்டுமே பெற்று புள்ளிகள் பட்டியலில் 9-வது இடத்தில் இருக்கிறது. இந்தத் தோல்வி பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் வீரர்களை, குறிப்பாக கேப்டன் சர்ஃப்ராஸ் அகமதை கடுமையாக விமர்சித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
பாகிஸ்தான் அணி வீரர்களைக் கடுமையாகச் சாடிய அந்நாட்டு ரசிகர்கள் இன்ஜமாம் உல் ஹக் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வு கமிட்டியை கலைக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் குஜ்ரன்வாலா சிவில் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில், தொடர்ந்து தோல்வியைச் சந்தித்து வரும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டுமென்றும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தேர்வுக் குழுவினை கலைக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், இது தொடர்பாக விளக்கமளிக்க பாகிஸ்கான் கிரிக்கெட் வாரியத்துக்கு உத்தரவிட்டுள்ளது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?