Sports
புவனேஷ்வர் குமார் அடுத்த 3 ஆட்டங்களுக்கு பங்கேற்கமாட்டார் - விராட் கோலி தகவல் !
மான்செஸ்டர் மைதானத்தில் நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 89 ரன்களில் இந்திய அணி தோற்கடித்து 7-வது முறையாக உலகக் கோப்பையில் வென்ற அணி எனும் பெருமையை தக்கவைத்தது.
இந்த போட்டியில், புவனேஷ்வர் குமார் தனது 3-வது ஓவரை வீசியபோது அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது. அவரால் தொடர்ந்து பந்துவீச இயலாமல் ஓய்வுக்கு சென்றார். அவரின் ஓவரில் மீதமிருந்த 2 பந்துகளை விஜய் சங்கர் வீசினார். அதன்பின் போட்டி முழுவதும் புவனேஷ்வர் குமார் பந்துவீசவில்லை.
பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் புவனேஷ்வர் குமாரின் காயம் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, " அவரின் காயம் குணமடையும் வரை ஓய்வில் இருக்க வேண்டியிருப்பதால், அவருக்கு பதிலாக அடுத்து வரும் ஆட்டங்களில் ஷமி பந்துவீசுவார். புவனேஷ்வர் குமார் அடுத்து 2 முதல் 3 போட்டிகளுக்கு விளையாட மாட்டார். புவனேஷ்வர் குமார் முக்கியம் அணிக்கு முக்கியம், விரைவில் குணமடைவார் என நம்புகிறேன் " விராட் கோலி இவ்வாறு கூறினார்.
இந்திய அணியில் ஏற்கனவே காயம் காரணமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் ஓய்வில் உள்ளார். மேலும், இப்போது புவனேஷ்வர் குமாரும் காயமடைந்துள்ளது இந்திய அணிக்கு சற்று பின்னடைவு தான். இந்திய அணி அடுத்த ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை 22ம் தேதி சந்திக்கிறது.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?