Sports
உலக கோப்பை 2019 : தென்னாப்பிரிக்க சிங்கங்களை வீழ்த்துமா வங்கப்புலிகள் !
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஓவல் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா-வங்காளதேசம் அணிகள் மோதுகின்றன.
2019 கிரிக்கெட் உலகக்கோப்பையின் தொடக்கப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது. முதல் போட்டியில் மோசமான பேட்டிங்கால் தென்னாப்பிரிக்க அணி இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. பேட்டிங்கில் குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டம் இழந்தனர். தாஹிர் மற்றும் ரபாடாவின் பெளலிங் தென்னாப்பிரிக்காவுக்குக் கைகொடுக்கும். தென்னாப்பிரிக்க அணி வெற்றி பெற வேண்டும் என்றால் அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் பொறுப்புடன் விளையாட வேண்டியது அவசியம்.
வங்கதேசத்தைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 264 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்ஃபிகுர் ரஹீமை தவிர மற்ற வீரர்கள் பேட்டிங்கில் ஃபார்மில் இல்லை. ருபெல் ஹுசைன் ஷாகிக் அல் ஹசன், சைஃபுதின் ஆகியோரின் பெளலிங் இந்திய அணியின் டாப் ஆர்டரை சொற்ப ரன்களுக்கு வெளியேற்றியது. பயிற்சியின் போது மணிக்கட்டில் காயம் அடைந்த அதிரடி பேட்ஸ்மேன் தமிம் இக்பால் இந்த ஆட்டத்தில் ஆடுவாரா? என்பது சந்தேகம் தான்.
இதுவரை இரு அணிகளும் உலகக் கோப்பை போட்டிகளில் மூன்று முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் தென்னாப்பிரிக்கா இரண்டு முறையும், வங்கதேசம் ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.
போட்டியை வென்றால் இரண்டு அணிகளுக்குமே இது முதல் வெற்றி என்பதால் ஆட்டத்தில் பரபரப்பிற்கு குறைவிருக்காது.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !