Sports

உலகக் கோப்பை 2019 : நியூசிலாந்து எதிரான ஆட்டத்தில் 136 ரன்களுக்கு சுருண்டது இலங்கை !

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (சனிக்கிழமை) கார்டிப்பில் நடைபெறும் 3-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க ஆட்டக்காரர்களாக திரிமன்னேவும் கருணரத்னேவும் களமிறங்கினர்.

ஆட்டத்தின் முதல் பந்திலேயே பவுண்டரி அடித்து அசத்திய திரிமன்னே அடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து களமிறங்கிய குசல் பெரேரா 29 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்தடுத்து விக்கெட்கள் வீழ்ந்த வண்ணம் இருந்தது. இருப்பினும், மறுமுனையில் கேப்டன் கருணரத்னே அரைசதம் கடந்தார். ஆரம்பம் முதலே நியூசிலாந்து அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் திணறினர்.

29.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த இலங்கை அணி, 136 ரங்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இலங்கை அணியில் அதிகபட்சமாக கேப்டன் கருணரத்னே 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து தரப்பில் மேட் ஹென்றி மற்றும் பெர்குசன் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் நியுசிலாந்து அணி ஆடி வருகிறது.