Sports
உலக கோப்பை பயிற்சி ஆட்டம் : நியூஸிலாந்திடம் இந்திய அணி படுதோல்வி !
12 வது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. இதில் 10 அணிகள் கலந்து கொள்கிறது. இதற்கான பயிற்சி ஆட்டங்கள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ட்ரெண்ட் போல்டின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் அவுட்டானார். அடுத்துவந்த ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், டோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது.
இக்கட்டான நேரத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியின் ஸ்கோரை சற்றே உயர்த்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது. நியூசிலாந்து சார்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.
இதையடுத்து நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கப்தில், முன்ரோ ஆகியோர் களமிறங்கினர். ஆட்டத்தின் 2-வது ஓவரிலேயே முன்ரோவின் விக்கெட்டை பும்ரா சாய்த்தார். கப்திலின் விக்கெட்டை ஹர்திக் பாண்ட்யா வீழ்த்தினார். அதன்பின் ஜோடி சேர்ந்த ராஸ் டெய்லர் மற்றும் கேன் வில்லியம்சன் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர். இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!